காதம்பரி தேவி

காதம்பரி தேவி (Kadambari Devi) யோதிந்திரநாத் தாகூரின் மனைவியும் தேவேந்திரநாத் தாகூரின் மருமகளும் ஆவார். 1868 ஆம் ஆண்டு சூலை மாதம் 5 ஆம் நாள் இவருக்கு 10 வயதாக இருந்தபொழுது திருமணம் நடைபெற்றது. தன்னுடைய கணவரைவிட ஒன்பது வயது இளையவராக இவர் இருந்தார், அப்போது இவருக்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.[1] மைத்துனர் இரவீந்திரநாத் தாகூரை விடவும் இவர் இரண்டு வயது மூத்தவர் ஆவார்.[2]

காதம்பரி தேவியின் புகைப்படம்

தாகூருடைய பல கவிதைகளைத் தொகுப்பதில், இவர் வெளிப்படுத்திய படைப்பாக்கமும் விமர்சனங்களும் இளம் ரவீந்திரநாத் தாகூரைப் பெரிதும் கவர்ந்தது. ஒரு நல்ல நண்பர் மற்றும் விளையாட்டுத் தோழனாக தாகூர் இவரிடம் பழகினார். தாகூரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றிய பெண்களில் ஒருவராக காதம்பரி தேவி இருந்தார். தாகூர் மற்றும் காதம்பரி தேவி இவர்களின் உறவு சர்ச்சைக்குரியதாகவும் சோகத்தின் கூறுகள் நிரம்பியதாகவும் அறியப்படுகிறது.

இரவீந்திரநாத் தாகூருக்கு திருமணமான நான்கு மாதங்கள் கழித்து 1884[3] ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் இவர் எந்தவிதமானக் காரணங்களுமின்றி தற்கொலை செய்து கொண்டார்.தாகூர் குடும்பத்தினர் இவரது தற்கொலை பற்றி எப்போதும் மௌனம் காத்தனர். குடும்பப் பிரச்சினைகளே இவரது தற்கொலைக்கு காரணம் என்ற வதந்திகள் உலவின. இவரது மரணத்திற்குப் பிறகு தாகூர் மனமுடைந்து போனார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தாகூர், இவர் நினைவாகப் பல பாடல்களையும் கவிதைகளையும் எழுதினார்.

காதம்பரி தேவியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு இயக்குனர் சுமன் கோசு, காதம்பரி என்றொரு திரைப்படத்தை வெளியிட்டார். கொங்கோனா சென் சர்மா மற்றும் பரம்பிரதா சாட்டர்சி இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Dastider, Shipra. "Jyotirindranath Tagore". Banglapedia (Asiatic Society of Bangladesh) இம் மூலத்தில் இருந்து 2007-04-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070427174551/http://banglapedia.search.com.bd/HT/T_0019.htm. பார்த்த நாள்: 2013-06-14. 
  2. Mallika Sengupta, Kobir Bouthan & Tamal Ghosh, Kadambari, 432 pp., (A novel), Ujjwal Sahitya Mandir, College St. Kolkata
  3. Tamal Ghosh. Kadambari. Ujjwal Sahitya Mandir.. பக். 432. 
  4. Times of India. Kadambari explores Tagore and his sis-in-law's relationship responsibly May 4, 2015.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதம்பரி_தேவி&oldid=3575090" இருந்து மீள்விக்கப்பட்டது