காத்தாயி அம்மன்
காத்தாயி அம்மன் என்பவர் நாட்டுப்புறத் தெய்வம் ஆவார். இவர் கையில் குழந்தையை வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் சிலையாக அமைக்கப்படுகிறார். இவர் குழந்தையுடன் இருப்பதால் குழந்தையம்மன் என்று அழைக்கப்படுகிறார். இவரது குழந்தையை முருகன் என்கின்றனர். [1]
சொல்லிலக்கணம்
தொகுகாத்தாயி - காத்த + ஆயி. காக்கும் தொழிலைச் செய்வதால் காத்தாயி என்று அழைக்கின்றார்கள். முருகனின் மனைவியான வள்ளியை காத்தாயி என நம்புவோரும் உள்ளனர். இவர்கள் வள்ளி தந்தைக்காக பயிர்களை காக்கும் தொழிலை செய்தமையால் இப்பெயரை பெற்றமையாக கூறுகின்றனர்.
இவரை காத்தியாயினி அம்மன் என்றும் அழைக்கின்றனர்.
தொன்மம்
தொகுகாத்தாயி அம்மனின் வரலாற்றுக்கு எண்ணற்ற தொன்மக்கதைகள் உள்ளன. காத்தாயி முருகனின் மனைவியான வள்ளியென்றும், சப்த கன்னிகளில் ஒருத்தியென்றும், காத்யாயன முனிவரின் மகளென்றும்[2] மூன்று கதைகள் உள்ளன.
பொதிகை மலையின் அடிவாரத்தில் வாழந்த விவசாயிக்கு ஏழு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் பருவத்தினை அடைந்தாலும், அந்த விவசாயியால் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. இதனால் ஆற்றங்கரையில் சிவபெருமானின் வடிவமான லிங்கத்தினை மணலில் உருவாக்கி வழிபட்டனர். சிவபெருமான் வழிபோக்கனைப் போல அங்குவந்து அவர்களின் பூஜைக்கு இடையூறு செய்தார். அவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு சிதறிச் சென்றார்கள். சிவபெருமான் மறைந்துவிட அனைவரும் ஒன்றுகூடும் போது காத்தாயி மட்டும் குழந்தையுடன் வந்தாள்.
அக்குழந்தை யாது என வினவிய சகோதரிகளுக்கு அக்குழந்தை அந்த இளைஞன் தன்னைத் தழுவியதால் பிறந்தது என்றாள். மற்றவர்கள் நம்ப மறுத்தனர். அதனால் தன்னுடைய குழந்தையுடன் தீயில் இறங்கி தான் கூறுவது உண்மையென நிறுபித்தார். [3]
காத்யாயன முனிவர் என்வரின் மகளாகப் பிறந்தவளை காத்தாயி அம்மன் என்கின்றனர். அனைத்து உயிர்களையும் தன் குழந்தை போல காப்பதால் காத்தாயி குழந்தையுடன் இருப்பதாக கூறுகின்றார்கள்.[2]
கோயில்கள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ http://temple.dinamalar.com/New.php?id=577 அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்.
- ↑ 2.0 2.1 2.2 http://temple.dinamalar.com/New.php?id=1531
- ↑ "நக்கீரன்". Archived from the original on 2010-03-09. பார்க்கப்பட்ட நாள் 2016-07-10.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-07-10.