காந்தா குமாரி பட்நகர்
காந்தா குமாரி பட்நகர் (Kanta Kumari Bhatnagar)[1] (1930கள் - 13 ஆகஸ்ட் 2011) இந்தியாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் பெண் நீதிபதியும், ஆர்வலருமாவார். இவா் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முதல் பெண் நீதிபதி ஆவாா். மேலும் பட்நகர் ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.[2]
காந்தா குமாரி பட்நகர் | |
---|---|
பிறப்பு | 1929/1930 |
இறப்பு | 13 ஆகஸ்ட் 2011 (வயது 81) உதய்பூர் |
அறியப்படுவது | உயர் நீதிமன்ற நீதிபதி ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் |
இவர் ராஜஸ்தானின் முக்கிய பெண் நீதிபதிகளுள் ஒருவராகவும் இருந்தார்.
சுயசரிதை
தொகுபட்நகர் 1968 இல் ராஜஸ்தானில் நீதிபதியாக பணியாற்றினார்.[2] 1992 ஜூன் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆனார்.[2] காந்தா குமாரி பட்நகர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய முதல் பெண் நீதிபதியாக,[3] சுமார் ஐந்து மாதங்கள் பதவி வகித்தார்.[4]
பட்நகர் 2000 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவரானார்.[1] 13 ஆகஸ்ட் 2011 அன்று உதய்பூரில் மாரடைப்பால் 81 வயதில் காந்தா குமாரி பட்நகர் இறந்தார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Former Chairman & Members". Rajasthan State Human Rights Commission. Archived from the original on 20 May 2015. பார்க்கப்பட்ட நாள் 30 July 2017.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Former Madras CJ passes away" (in en). The Hindu. 15 August 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/former-madras-cj-passes-away/article2358322.ece.
- ↑ "New CJ of Madras HC sworn in; governor, CM present" (in en-in). Eenadu English Portal. 5 April 2017 இம் மூலத்தில் இருந்து 8 ஜனவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180108120414/http://www.eenaduindia.com/states/tamil-nadu/2017/04/05114152/New-CJ-of-Madras-HC-sworn-in-governor-CM-present.vpf.
- ↑ Subramanil, A. (30 June 2017). "Madras High Court gets all-woman first bench for 1st time in 135 years - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/madras-high-court-gets-all-woman-first-bench-for-1st-time-in-135-years/articleshow/59379229.cms.