காந்தா சுப்பாராவ்

இந்தியப் பெண் மருத்துவர்

காந்தா சுப்பாராவ் (Kanta Subbarao) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நோய்நுண்ணியியல் நிபுணர் ஆவார். மூலக்கூற்று மரபியல் நிபுணர் மற்றும் மருத்துவர்-அறிவியலாளராகவும் அறியப்படுகின்ற இவர் இன்ஃப்ளூயன்சா பற்றிய குறிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஆத்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலுள்ள தோகெர்ட்டி நிறுவனத்தில் பேராசிரியராகவும் உள்ளார்.

காந்தா சுப்பாராவ்
Kanta Subbarao
2006 ஆம் ஆண்டில் காந்தா சுப்பாராவ்
துறைநோய்நுண்ணியியல், மூலக்கூற்று மரபியல்
பணியிடங்கள்தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் கழகம்
உலக சுகாதார அமைப்பு
தோகெர்ட்டி பல்கலைக் கழகம்
கல்வி கற்ற இடங்கள்கிருத்தவ மருத்துவக் கல்லூரி
ஓக்லகோமா பல்கலைக்கழகம்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் காந்தா சுப்பாராவ் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்றார். ஓக்லகோமா பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறையில் பொதுச் சுகாதாரத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.[1]

சுப்பாராவ் நோய்நுண்ணியியல் நிபுணர், மூலக்கூற்று மரபியல் நிபுணர் மற்றும் மருத்துவர்-அறிவியலாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகின்றார்.[2][1] தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தில் சுப்பாராவ் இன்ஃப்ளூயன்சா திட்டத்தில் சேர விரும்பினார். அப்போது இவர் சேர விரும்பிய சுவாச ஒத்திசைவு வைரசு திட்டத்தில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டன.[1] இவர் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் வளர்ந்து வரும் சுவாச வைரசுகள் பிரிவின் தலைவராக பணியாற்றினார்.[1] அமெரிக்க நுண்ணுயிரியியல் அகாதமி மற்றும் அமெரிக்க தொற்றுநோய்கள் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் சுப்பாராவ் உள்ளார்.[3] 2016 ஆம் ஆண்டில் இவர் இன்ஃப்ளூயன்சா பற்றிய குறிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான உலக சுகாதார அமைப்பின் கூட்டு மையத்தில் சேர்ந்தார். தோகெர்ட்டி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணிபுரிகிறார். 2021 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய உடல்நலம் மற்றும் மருத்துவ அறிவியல் அகாதமியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக தகுதி பெற்றார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Lyons, Michele (2019-03-25). "Celebrating NIH's History-Making Women". NIH Intramural Research Program (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.  இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  2. Neergaard, Lauran (2005-12-18). "NIH using live viruses to make bird flue vaccine mist". The Star-Democrat: pp. 10. https://www.newspapers.com/clip/110723314/nih-using-live-viruses-to-make-bird/. 
  3. "Professor Kanta Subbarao | Doherty Website". www.doherty.edu.au. பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.
  4. "29 new Fellows elected - AAHMS". aahms.org (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). 2021-10-26. பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தா_சுப்பாராவ்&oldid=3530823" இலிருந்து மீள்விக்கப்பட்டது