காந்தி கடைத்தெரு, பெங்களூர்

இந்தியாவின் பெங்களூர் நகரிலுள்ள ஒரு கடைத்தெரு

காந்தி கடைத்தெரு (Gandhi Bazaar) இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் உள்ள பசவனகுடியில் இருக்கும் ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியாகும். முக்கியமாக மலர் மற்றும் சுவையூட்டுப் பொருள்கள் இங்கு கூவி விற்கப்படுகின்றன.[1] பெங்களூர் நகரின் மிகப் பழமையான பகுதிகளில் ஒன்றான காந்தி கடைத்தெரு பாரம்பரியமானது மற்றும் பழமைவாதமானது என்று கூறப்படுகிறது. பழம், காய்கறி மற்றும் துணி கடைகள்; மற்றும் 1943 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வித்யார்த்தி பவன்[2] போன்ற உணவகங்கள் உட்பட இப்பகுதியில் பல கோயில்களும் உள்ளன. சந்தை பொதுவாக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படுகிறது, பூசை பொருட்களை வாங்குவதற்கான திருவிழா காலங்களில் கூட்டம் அதிகரிக்கும்.[3] பசவனகுடியின் வர்த்தக மையமாகவும் பெங்களூர் நகரத்தின் மிகப் பழமையான வணிக நிலையங்களைக் கொண்டுள்ள பகுதியாகவும் உள்ள டி.வி.குண்டப்பா சாலை காந்தி கடைத்தெரு வழியாகச் செல்கிறது.[4]

காந்தி கடைத்தெரு பகுதி

கன்னட எழுத்தாளர் மசுத்தி வெங்கடேச அய்யங்கார் இவ்வட்டாரத்தில் வசிக்கின்றார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Ranganna, Akhila (5 March 2017). "The grand old Gandhi Bazaar". Bangalore Mirror. http://bangaloremirror.indiatimes.com/columns/sunday-read/the-grand-old-gandhi-bazaar/articleshow/57469865.cms. பார்த்த நாள்: 8 August 2017. 
  2. 2.0 2.1 Ganesh, Deepa (6 January 2014). "Their dose tastes of nostalgia". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/Food/their-dose-tastes-of-nostalgia/article5544575.ece. பார்த்த நாள்: 8 August 2017. 
  3. "Basavanagudi: Interesting places to explore". My Bangalore. 29 September 2010 இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170808233117/http://www.mybangalore.com/article/0910/basavanagudi-interesting-places-to-explore.html. பார்த்த நாள்: 8 August 2017. 
  4. Ram, Theja (6 June 2017). "From Lavelle to Jayachamarajendra, ever wondered who Bengaluru's famous roads are named after?". The News Minute. http://www.thenewsminute.com/article/lavelle-jayachamarajendra-ever-wondered-who-bengalurus-famous-roads-are-named-after-63247. பார்த்த நாள்: 8 August 2017.