காந்தி கலைமன்ற நூலகம்

காந்தி கலைமன்றம் என்பது தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரில் உள்ள ஒரு நூலகம் ஆகும். இது சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பி. எஸ். குமாரசுவாமிராஜா அவர்களின் இல்லத்தில் அமைந்துள்ளது. இந்த நூலகத்தை அவர் அவ்வப்போது வாங்கிப் படித்து சேகரித்து வைத்திருந்த நூல்களைக் கொண்டும், புதியதாக நூல்களை வாங்கியும் உருவாக்கினார். பின்னர் அப்போதைய குடியரசுத் தலைவரான இராஜேந்திரப் பிரசாத்தைக் கொண்டு திறந்துவைத்தார். இந்த நூலகத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. கொ.மா.கோதண்டம் (7 சூலை 2018). "ஆளுநர் பதவி வேண்டாம்... நூலக வேலை பாக்கியிருக்கிறது!". கட்டுரை (இந்து தமிழ்). http://tamil.thehindu.com/general/literature/article24362574.ece. பார்த்த நாள்: 9 சூலை 2018.