காந்தி கோவில்
மகாத்மா காந்தி கோவில், மகாத்மா காந்தி மற்றும் அவருடைய மனைவி கஸ்தூரிபாய் காந்தி நினைவாக அமைந்த கோவில் உள்ள ஒரே இடம் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், சலங்கப்பாளையம் பேரூராட்சியில் அமைந்த செந்தாம்பாளையம் எனும் ஊராகும். இந்த ஊரைச் சேர்ந்த வையாபுரி முதலியார், காந்தியடிகள் மீது கொண்ட பற்றால் கடந்த 1998ம் ஆண்டு காந்திக் கோவிலைக் கட்டினார். இக்கோயிலில் காந்தி ஜெயந்தி நாளான ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-ஆம் நாளன்று சிறப்பாக விழா கொண்டாடப்பட்டு வருகிறது.[1][2][3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://www.thehindu.com/news/national/tamil-nadu/Mahatma-Gandhi-temple-attracts-children/article15422953.ece
- ↑ https://www.deccanchronicle.com/nation/current-affairs/041019/special-poojas-at-gandhi-temple-near-erode.html
- ↑ https://timesofindia.indiatimes.com/city/erode/puja-performed-at-gandhi-temple-in-erode-district/articleshow/60917180.cms