கான்லே விளைவு

ஒளியை உருவாக்கும் அணுக்கள், காந்தப்புலத்தில் ஒரு குறிப்பிட்ட திசையில் செல்லும் போது, ஒளியின் முனைவாக்கல் (Polarization) அளவு குறைகிறது. இதில் ஒளியானது ஏற்கனவே முனைவாக்கல் பெற்ற ஒளியால் தூண்டப்பெறுகிறது. இதுவே கான்லே விளை'வு (Hanle effect) ஆகும். இது வானியலில், காந்த சக்தியின் அளவைக் கண்டறியப் பயன்படுகிறது.

1924 ஆம் ஆண்டு வில்கெம் கான்லே Zeitschrift für Physik என்ற ஆய்வு நுாலில் இதைப் பற்றி முதலில் விளக்கினார். குவாண்டம் இயங்கியலில் இவ் விளைவை அறிந்து கொள்ள பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.[1]

பயன்பாடு தொகு

  • கான்லே விளைவின் மூலம் சூரியனிலிருந்து வரும் ஒளியின் அளவை ஆய்வு செய்வதன் மூலம் சூரியனின் காந்த ஆற்றலைக் கணக்கிட முடிகிறது.
  • வானியலில் முனைவாக்கல் (Polarization in astronomy) நட்சத்திரங்களிலுள்ள வாயுக்களை அறிய உதவுகிறது.
  • வரைவு நிறமாலை (Imaging spectroscopy) அண்டத்திலுள்ள பொருட்களைக் கண்டறிய உதவுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்லே_விளைவு&oldid=3365943" இலிருந்து மீள்விக்கப்பட்டது