கான் ஆறு (கொரியா)

தென் கொரியாவில் உள்ள ஆறு

கான் நதி (Han River) இது தென்கொரியாவில் உள்ள ஒரு முக்கிய மான நதி மற்றும் இது கொரிய தீபகற்ஞத்தில் நான்காவது நீளமான நதி.[1]கொரிய தீபகற்பத்தின் கிழக்கு மலைகளின் இரண்டு சிறிய ஆறுகளாக இந்த நதி தொடங்குகிறது, பின்னர் இது நாட்டின் தலைநகரான சியோலுக்கு அருகே இணைகிறது.

காண் நதியும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் கொரிய வரலாற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

இந்த நதி 12 மில்லியனுக்கு அதிக மான தென் கொரியர்களுக்கு நீர் ஆதாரமாக செயல்படுகிறது.சுலை 2000 இல் அமெரிக்க இராணுவம் நச்சு இரசாயனங்கள் ஆற்றில் கொட்டியதாக ஒப்புக்கொண்டது, இது கடுமையான எதிர்ப்புக்களை ஏற்படுத்தியது.[2]

தற்போது கான் ஆற்றின் கீழ் பகுதிகள் பாதசாரி நடைபாதைகள் , மிதிவண்டி பாதைகள் ,பொது பூங்காக்கள் மற்றும் உணவகங்கள் உள்ளன.

நிலவியல்தொகு

இந்த நதி சியோல் வழியாக பாய்கிறது, இது மஞ்சள் கடலில் பாய்வதற்க்கு சற்று முன்பு ரிம்சுன் நதியுடன் இணைகிறது. ஆற்றின் இரண்டு முக்கிய பிரிவுகள் நாம்கான் நதி மற்றும் புக்கான் நதி. ஜியோன்ஜி மாகாணத்தை கடக்கிறபோது இது கான் நதி என்று அழைக்படுகிறது.கான் ஆற்றின் முகப்பில் பரந்த வீடுகளைக் காணலாம், இது தென் மற்றும் வட கொரியாவை பிரிக்கும் கொரிய இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்துடன் கடலைச் சந்திக்கிறது.

காண் ஆற்றின் மொத்த நீளம் சுமார் 494 கிலோமீட்டர் (307 மைல்) ஆகும்.

வரலாறுதொகு

கொரிய வரலாற்றில் கான் நதி ஆரம்ப காலத்திலிருந்தே முக்கிய பங்கு வகித்தது.கிங் ஜாங்சு (காலம்:413-491) ஆட்சி காலத்தில் அவரது போட்டியாளரான பேக்ஜேவிடம் இருந்து இதனை கைப்பற்றினார். 553 ஆம் ஆண்டில் சில்லா தீபகற்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்க்கான முயற்சியின் ஒரு பகுதியாக முழு நதியின் கட்டுப்பாட்டையும் கைப்பற்ற பேக்ஜே உடனானகூட்டணியை முறித்துக் கொண்டது.

666 இல் பேக்ஜே மற்றும் கோகுரியோ இருவரின் மறைவுக்கு பின்னரசில்லாவின் கீழ் கான் நதி இனைக்க பட்டது.

கான் நதி பெரும்பாலும் தற்போது கொரியா குடியரசிற்கு அல்லது தென் கொரியாவுக்கு சொந்தமானது.கடந்த சில ஆண்டுகளாக கான் நதி மாசு அடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தென் கொரியாவில் வளர்ந்து வரும் தொழில் மற்றும் நகர்ப்புற வாசிகள் கழிவு நீர் ஒடையாக இதனை பயன்படுத்துகின்றனர்.

தென் கொரியாவில் 1986 ஆம் ஆண்டு வடகொரியா இந்த நதியில் வெள்ள பெருக்கு ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏழுத்தது.

சுலை 2000 இல், அமொரிக்க இராணுவம் சியோலில் உள்ள ஒரு தளத்திலிருந்து 75.5 லிட்டர் அதிக நச்சு இரசாயன ஃபார்மால்டிகைட்டை ஆற்றில் கொட்டியதாக ஒப்புக்கொண்டது.சுமார் 12 மில்லியன் தென் கொரியர்களுக்கு இந்த ந தி குடிநீர் ஆதாராமாக செயல்படுவதால், தென் கொரியர்கள் போராட்டங்களைத் தொடங்கினர் மற்றும் தென் கொரியர்களின் சுற்றுச்சூழல் விதிகளை அமெரிக்க இராணுவம் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர்.

கூட்டு பயண்பாட்டு மண்டலம்தொகு

நவம்பர் 4, 2018 அன்று, வட கொரியாவைச் சேர்ந்த 10 பேரும் , தென் கொரியாவைச் சேர்ந்த 10 பேரும் அடங்கிய 20 பேர் கொண்ட குழு, கொரிய நாடுகளுக்கு இடையேயான ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கியது.இது கான் ஆற்றின் கரையோரத்தில் ஒரு கூட்டு பயண்பாட்டு மண்டலத்தை உருவாக்க வழிவகுக்கும்.கான் நதியின் கரையோரத்தின் கொரியர்களின் ஆய்வு டிசம்பர் 9,2018 அன்று நிறைவடைந்தது.புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட திட்டுகள் கொண்ட நதியின் கரையோரத்தின் புதிய வரைப்படம் 2019 சனவரி 25 ஆம் தேதிக்கு பகிரப்பட்டது.

ஊடகங்களில்தொகு

கான் நதி பல திரைப்படங்களில் ஒரு இடமாக இடம்பெறுகிறது.குறிப்பிடத்தக்க படங்களில் பின்வருவன அடங்கும்:

  • ' ' காம்சுடே ஆன் தி மூன் (2009)

சான்றுதொகு

  1. Shin,Jung-il, "Historic River Flowing through the lorean Peninsula." koreana (Summar, 2004), 6.
  2. . 15 சூலை 2000. https://www.nytime.com/200/07/15/news/us-dumping-of-chemical-riles-koreans.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்_ஆறு_(கொரியா)&oldid=3063987" இருந்து மீள்விக்கப்பட்டது