கான் ஷேய்குன் இரசாயனத் தாக்குதல் 2017

சிரியாவில் தஹ்ரிர் அல் - ஷாம் (ahrir al-Sham) எனும் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப் ( Idlib) மாகாணத்தின் கான் சைய்குன் (Khan Shaykhun) நகரில் ஏப்ரல் 4, 2017 அன்று நடத்தப்பட்ட வான் தாக்குதலில்[3] வெளிப்பட்ட சாரின் (sarin) எனும் இரசாயன வாயுவால் பெருமளவில் மக்கள் மரணமடைந்தனர். இட்லிப் நகர சுகாதாரப் பிரிவு 58 பேர் மரணமடைந்தர் என உறுதிப்படுத்தியது[4]. மேலும் 300 இற்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர். மரணமடைந்தோரில் 11 குழந்தைகளும் அடங்குவர். 2013 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கோத்தா இரசாயனத் தாக்குதலுக்குப் (Ghouta chemical attack) பின் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.[5]

கான் ஷேய்குன் இரசாயனத் தாக்குதல் 2017
இடம்கான் ஷேய்குன், இட்லிப் மாகாணம், சிரியா
நாள்ஏப்ரல் 4, 2017 (2017-04-04)
06:30 உள்ளூர் நேரம்[1]
தாக்குதல்
வகை
இரசாயனத் தாக்குதல்
ஆயுதம்இரசாயனம்
இறப்பு(கள்)58–100+ (11 குழந்தைகள் உட்பட)[2]
காயமடைந்தோர்300–400+[2]
தாக்கியோர்அடையாளம் தெரியவில்லை
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
சிரிய அரபு வான் படையினர்

தாக்குதல்தொகு

உள்ளூர் நேரப்படி காலை 6:30[6] மணியளவில் போர் விமானங்கள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இட்லிப் நகர சுகாதாரப் பொறுப்பாளர் கூறினார். இத்தாக்குதலுக்காக சிரிய அரபு வான் படையினர் மீது சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் சிரிய இராணுவம் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது[7]. தாக்குதலுக்குப் பின்னர் அருகிலுள்ள மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோர் சிகிட்சை பெற்றனர். இத்தாக்குதலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் இந்நகரின் பெரிய மருத்துவமனையில் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது[8]

எதிர்வினைகள்தொகு

எதிர்க்கட்சியின் எதிர்வினைதொகு

சிரியாவின் எதிர்கட்சி இத்தாக்குதல் சிரிய அரபு இராணுவ வான் படையினரால் நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதல் என கூறியுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அமைப்பு இது தொடர்பான உடனடி விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிரிய அரசின் எதிர்வினைதொகு

இரசாயனத் தாக்குதலை சிரிய அரசு இதுவரை நடத்தவில்லை எனவும் இனிமேலும் அதை பயன்படுத்த மாட்டோம் எனவும் தாக்குதலுக்குப் பின் சிரிய அரசின் அதிகாரி தெரிவித்தார்[9]. மேலும் இத்தாக்குதலில் சுகோய் சு-22 வானூர்தி வழியாக குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் இரசாயனங்கள் எதுவும் நிரப்பப்படவில்லை என அரசு ஆதரவு செய்தி நிறுவனம் அல்-மஸ்தார் நியூஸ் (Al-Masdar News) தெரிவித்தது[10].

மேற்கோள்கள்தொகு