காபாலிகர்
சைவசமயத்தின் ஒரு பிரிவான காபாலிக சைவநெறியை பின்பற்றுகின்றவர்கள் காபாலிகர் ஆவார்கள். கபாலிகர் என்றும் அழைப்பதுண்டு. இவர்கள் சைவச்சின்னங்களை அணிவதோடு, மண்டையோடு மற்றும் சூலம் ஆகியவர்களை தாங்கியவர்களாக இருப்பர்.[1]
இந்தியாவின் வடப்பகுதியில் வளர்ந்த நெறியாக கருதப்படும் காபாலிகம் தென்னகமான தமிழகத்திலும் வளர்ந்திருந்தது. சோழர்கள் காலத்தில் மற்ற சைவப்பிரிவுகளோடு காபாலிகளர்களும் தமிழகத்தில் இருந்துள்ளமைக்கான சான்றுகள் பாடல்களில் காணப்படுகின்றன.
புதினங்களில்
தொகுவரலாற்று புதினமாக எழுத்தாளர் கல்கி எழுதிய சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களில் காபாலிகள் தமிழ்நாட்டில் வசிப்பதாக எழுதப்பட்டுள்ளன.