காப்புச் செய்யுள்
காப்புச் செய்யுள் என்பது தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் முதலாவதாக அமையும் பாடல். கவிஞர் தான் படைக்க நினைத்துள்ள நூலினை வெற்றிகரமாக முழுமையாக இயற்றி முடிப்பதற்கு இறைவன் துணை நின்று காக்க வேண்டும் என்ற கருத்தில் இதைப் பாடுவார். எனவே இது காப்புச் செய்யுள் எனப்படுகிறது.
- எடுத்துக்காட்டு
ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே
- -ஆத்திச்சூடி காப்புச்செய்யுள்