காமராஜ் நகர் நெசவாளர் காலனி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காமராஜ் நகர் நெசவாளர் காலனி 'என்ற பகுதி சேலத்தின் மேற்குப் பகுதியில் சேலம்-கடலூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 37 மற்றும் 9 வது கோட்டங்களை உள்ளடக்கிய ஒரு பகுதியாகும். பொதுவாக அம்மாபேட்டை காலனி என்று மக்களால் அழைக்கப்படுகிற ஒரு பகுதியும் கூட இதுவாகும். 1964 ஆம் ஆண்டு நெசவாளர்களுக்கென அப்போதைய முதலமைச்சர் மதிப்பிற்குறிய காமராஜர் அவர்களாலும், அப்போதைய சேலம் சட்டமன்ற உறுப்பினர் அ.மாரியப்பன் அவர்களாலும் உருவாக்கப்பட்ட பகுதியாகும். நெசவாளர்களுக்காகவே அரசினால் நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு மாதத்தவனை மூலம் அவர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டது. மேலும் இங்கு அமைந்திருக்கக்கூடிய உழவர் சந்தை மிகவும் அப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இப்பகுதி முழுவதும் விசைத்தறிகள் மற்றும் கைத்தறிகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் ஒரு மாநராட்சி துவக்கப்பள்ளியும், ஒரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியும், அரசு உயர்நிலைப்பள்ளியும் இங்கு அமைந்துள்ளது.