காமா தோட்டம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காமா தோட்டம் (Gama garden) என்பது மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள ஓர் சிறப்பு ஆய்வகமாகும். பயிர் தொழிலில் எக்சு மற்றும் காமா கதிர்கள் விளைச்சலை எவ்வாறெல்லாம் பெருக்கக் கூடும் என்பதை வரிவாக ஆராயும் துறை. விதைகளுக்குக் கதிரூட்டி சிறந்த அதிக விளைச்சலைக் கொடுக்கும் விதைகளைத் தேர்ந்து எடுப்பது என்று ஆய்வதும் மேற்கொள்ளப்பட்டுள்ள பணியாகும். இவ்வாறு கதிரூட்டி பழங்களை அழுகிவிடாமல் நீண்ட நாட்கள் பாதுகாப்பது, பாதுகாக்கும் காலத்தில் அவைகளில் முளைவிடுவதைத் தாமதப்படுத்துதல், மருந்துகளையும் பிற மருத்துவப் பொருட்களையும் நச்சு நீக்கம் செய்வது போன்ற பயனுள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 500 கியூரி கோபால்ட்-60 ஐசோடோப்பு பயன்படுகிறது இது அமைந்துள்ள இடமே காமா தோட்டம் எனப்படுகிறது. வளர்ந்த நாடுகளிலும் இதுபோன்ற ஆய்வகங்கள் உள்ளன.
அணுவைப் பற்றி----பம்பாய்த் தமிழ்ச் சங்கம்