காமிசெட்டி சாவித்திரி

இந்திய அரசியல்வாதி

காமிசெட்டி சாவித்திரி (Kamisetty Savithri)(பிறப்பு 26 பிப்ரவரி 1923, இறந்த தேதி தெரியவில்லை) இந்திய அரசியல்வாதியும் புதுச்சேரியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் யானம் சட்டமன்றத் தொகுதியினைச் சேர்ந்தவர்.[1] 1959 மற்றும் 1964க்கு இடையில் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் யானத்தின் முன்னாள் மாநகரத் தந்தையாகவும் இருந்துள்ளார்.[2] காமிசெட்டி பரசுராம் நாயுடுவின் மனைவியும் ஆவார். இவர் யானத்தில் இறக்கும் வரை முக்கியமான தலைவராக இருந்தார். ஏனாமில் உள்ள சாவித்திரி நகர் இவரின் இறப்பிற்குப் பின்னால் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.[3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Directory of Indian Women Today, 1976". Ajīta Kaura, Arpana Caur. India International Publications. 1976. p. 251.
  2. "La Gazette de l'État". Pondicherry Government. 1964. p. 668.
  3. "యానాం: పుదుచ్చేరి శాసనసభ తోలి మహిళా ఎమ్మెల్యే దివంగత కామిశెట్టి సావిత్రి వర్థంతి కార్యక్రమం నిర్వహణ..." Yanam News Update.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமிசெட்டி_சாவித்திரி&oldid=3823742" இலிருந்து மீள்விக்கப்பட்டது