காமிண்டன் (புலவர்)
காமிண்டன் என்பவர் ஒரு புலவர். இவரைப் பற்றிக் கொங்கு மண்டல சதகம் பாடல் 52-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] இந்தப் புலவர் சர்க்கரை மன்றாடியாரைக் காண மன்றாடியார் இல்லத்துக்கு வந்தார். சர்க்கரையார் சற்றே அளவளாவி விட்டு அவருக்கு விருந்தளிப்பதற்காக, காமிண்டனிடம் சொல்லிவிட்டு, உள்ளே சென்றார். சற்றே காலம் தாழ்ந்தது. அங்கு வந்த அவது வேலையாள் ஒருவன் ‘விருந்து படைக்கக் காலமாகும்’ என்று காமிண்டனிடம் கூறினார். சர்க்கரையார் தன்னை மதிக்கவில்லை என்று காமிண்டன் கருதினார். எழுந்து சென்றுவிட்டார். சமையல் முடிந்த பின் சர்க்கரையார் புலவரைத் தேடினார். தேடிச் சென்றார். கண்டார். வருக என அழைத்துவந்தார். தன்னை இழிவு படுத்தியதாகப் புலவர் சர்க்கரையாரிடம் தெரிவித்தார். சர்க்கரையார் காய்ந்துகொண்டிருக்கும் நெய்யில் தன் கையை விட்டு, தாம் அவரை இழிவுபடுத்தவில்லை என்று சத்தியம் செய்தார். புலவர் ஏற்றுக்கொண்டு சர்க்கரையார் அளித்த உணவை உண்டார். புலவர் மேலும் சர்க்கரையாரைச் சோதனை செய்வாராய் உண்ட தன் வாயைக் கழுவி விட வேண்டும் என்றார். சர்க்கரையார் அதனையும் செய்தார். சர்க்கரையாருக்குத் தமிழ்மீது அத்துணைப் பற்று.
மேற்கோள்
தொகு- ↑ கொங்குமண்டல சதகம் பாடல் 52, முனைவர் ந. ஆனந்தி விளக்கம், நூல் சாரதா பதிப்பகம் வெளியீடு, 2008 பதிப்பு, பக்கம் 69-72