காமிண்டன் (வள்ளல்)
காமிண்டன் என்பவர் ஒரு கொடையாளி. இவரைப் பற்றிக் கொங்கு மண்டல சதகம் பாடல் குறிப்பிடுகிறது. வாணன் என்பவன் தன் வறுமையைப் போக்கிக்கொள்ள இவரை நாடினான். காமிண்டன் கொடுக்கவில்லை. எனவே வாணன், “கொடையில் பெரியவர் என்று உன்னைக் காண வந்தேன். நீர் எனக்குக் கொடுக்கவில்லை. அதனால் உன்னை விற்று என் வறுமையைப் போக்கிக்கொள்வேன்” என்று கூறிக் காமிண்டன் மடியைப் பிடித்து இழுத்தான். காமிண்டன் வாணனைப் பின் தொடர்ந்தார். சொன்னவாறே காமிண்டனை விற்று வாணன் தன் வறுமையைப் போக்கிக்கொண்டான். இவ்வாறு தனையே விற்றுக் காமிண்டன் கொடை வழங்கினான். இதனைக் கூறும் பாடல்
கொடையில் பெரியோய் உடனே எனக்குக் கொடாமையால்
கடையில் பெற நினை விற்று என் கலியைக் கழிப்பன் என
மடியைப் பிடித்திழுத்தே விலை கூறிய வாணன் மிடி
வடியப் பொருள் தந்த காமிண்டனும் கொங்கு மண்டலமே.[1]
- இவரைக் குறிக்கும் வேறு பெயர்கள்
மேற்கோள்
தொகு- ↑ கொங்கு மண்டல சதகம் பாடல் 67 முனைவர் ந. ஆனந்தி விளக்கம், நூல் சாரதா பதிப்பகம் வெளியீடு, பக்கம் 101-104
- ↑ திரிபுவன மாதேவிபுரம் எனக் குறிக்கப்பட்டுள்ள இந்த ஊர் இவ்வூர்க் கோயில் கல்வெட்டு
- ↑ காங்கேய நாடு கவுண்டன் பாளையம் சிவமலை 15 வள்ள நிலதானச் செப்பேடு (சக ஆண்டு 1715, கலியுக ஆண்டு 4794)
- ↑ அரசன் பாளையம் செப்பேடு (சக ஆண்டு 1715)
- ↑ திருச்செங்கோடு கந்தன் சர்க்கரை செப்பேடு