காம்போதி கருநாடக இசையில் மிகப் பிரபலமான ஒரு இராகமாகும். இது 72 மேளகர்த்தா இராகங்களில் 28வது மேளமாகிய அரிகாம்போதி இராகத்தின் ஜன்னிய இராகமாகும். பண்டைய தமிழிசைப் பண்களில் தக்கேசி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1]

இலக்கணம்

தொகு
ஆரோகணம் : ச ரி க ம ப த
அவரோகணம் : நி த ப ம க ரி ச

ஆரோகணத்தில் ஆறு சுரங்களையும் அவரோகணத்தில் ஏழு சுரங்களையும் கொண்ட ஒரு சாடவ சம்பூரண இராமாகும். சட்ஜம், பஞ்சமத்தோடு, சதுச்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், சதுச்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய இந்த ராகத்தின் சுரஸ்தானங்களாகும். ஆரோகணத்தில் நிஷாதம் வராமையினால் இது ஒர வர்ஜ இராகமாகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்போதி&oldid=2971930" இலிருந்து மீள்விக்கப்பட்டது