காயா பழமா
காயா பழமா விளையாட்டு இரு வகையில் விளையாடப்படுகிறது.
சேர்த்தாளியா?
தொகுஅழுது அடம் பிடிக்கும் குழந்தையிடம் தாய் காயா பழமா என்று கேட்டு, பழம் என்று சொல்ல வைத்து அழுகையை நிறுத்துவாள். சிறுவர் சிறுமியர் பகைமை கொள்பவரிடம் இவ்வாறு கேட்டு நண்பராக்கிக் கொள்வர்.
ஆள்காட்டி விரலை நடுவிரலால் பின்புறமாக வளைத்து இடைவெளி உண்டாகுமாறு செய்து காட்டிக் 'காயா, பழமா' என்பர்.
பழம் என்றால் இடைவெளி இல்லாமல் இரண்டு விரல்களையும் அமுக்க வேண்டும்.
காய் என்றால் இடைவெளிக்குள்ளே கையை விட்டு இரு விரல்களையும் பிளந்துவிட வேண்டும்.
பழம் செயது காட்டினால் சேர்த்தாளி என்பது பொருள்.
காய் செய்து காட்டினால் சேர்த்தாளி இல்லை என்பது பொருள்
- காட்டும் முறை
-
பழம்
-
காய்
நீச்சல் விளையாட்டில் தொடுபவரைத் தெரிவு செய்தல்
தொகுகாயா பழமா பிற விளையாட்டுகளில் பட்டவரைத் தேர்ந்தெடுக்க உதவும் ஒருவகை விளையாட்டு. பொதுவாக நீச்சல் விளையாட்டுகளில் நீந்தித் தொட இது பயன்படும்.
ஒவ்வொருவரும் தண்ணீரைச் சுண்டவேண்டும். சுண்டும்போது ஒலி கேட்டால் பழம். கேட்காவிட்டால் காய். காயானவர் பலர் இருந்தால் மீண்டும் சுண்டுவர். ஒருவர் மிஞ்ச ஏனையோர் அனைவரும் பழமாகும்வரையில் நீரைச் சுண்டவேண்டும்.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980