காய்கறி விவசாயம்

காய்கறி விவசாயம் (Vegetable farming)என்பது மனித நுகர்வுக்காக காய்கறிகளை வளர்ப்பது ஆகும். இந்த பழக்கம் பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல பகுதிகளில் தொடங்கியது; குடும்பங்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக அல்லது உள்நாட்டில் வர்த்தகம் செய்ய காய்கறிகளைப் பயிரிட ஆரம்பித்தன. முதலில் மனித உழைப்பைக் கொண்டு செய்யப்பட்டது. காலப்போக்கில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு, அவற்றைக் கொண்டு நிலங்கள் உழவு செய்யப்பட்டன. சமீபத்தில், இயந்திரமயமாக்கலானது இயந்திரத்தின் மூலம் செய்யக்கூடிய கிட்டத்தட்ட அனைத்து செயல்களாலும் காய்கறி விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலர், அவர்கள் இடத்திலேயே நன்கு விளையக்கூடிய குறிப்பிட்ட பயிர்களை வளர்க்கிறார்கள். சொட்டுநீர்ப் பாசனம், மேட்டுப்பாத்தி தோட்டம், கண்ணாடியின் கீழ் சாகுபடி செய்தல் போன்ற புதிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் அவர்களே காய்கறிகளைப் பறித்தெடுத்து, உழவர் சந்தைகள், உள்ளூர் சந்தைகள் அல்லது சொந்த விற்பனை மூலம் விற்கலாம். அல்லது அவர்கள் அறுவடை செய்யாமல், மொத்த விற்பனையாளர்கள், சேமிப்பாளர்கள் அல்லது சில்லறை விற்பனையாளர்களிடம் மொத்தமாக ஒப்படைக்கலாம்.[1]

மேட்டுப் பாத்தித் தோட்டம்-வண்ணம் தீட்டப்பட்ட மரக்கட்டைகளால் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "vegetable farming | History, Methods, Equipment, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காய்கறி_விவசாயம்&oldid=4043071" இலிருந்து மீள்விக்கப்பட்டது