காரணை விழுப்பரையன்

13ம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் புலவர்.

காரணை விழுப்பரையன் என்பவர் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் புலவர் ஆவார். இவர் மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவரின் அரண்மனைப் புலவர்களில் ஒருவராக இருந்துள்ளார். இவருடன் இருந்த கொடிகொண்டான் பெரியான் ஆதிச்ச தேவர் என்பவர் மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவரின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.[1]

சுந்தபாண்டிய தேவரின் காலத்தில் நிகழ்ந்தவைகளை மையமாகக் கொண்ட பூவண்ணன் என்பவரின் வளவன் பரிசு நூலில் காரணை விழுப்பரையன் ஒரு கதாப்பாத்திரமாக வருகின்றார்.[2]

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=304&pno=167
  2. வளவன் பரிசு நூல் - பூவண்ணன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரணை_விழுப்பரையன்&oldid=2718288" இலிருந்து மீள்விக்கப்பட்டது