காராளர் என்போர் வேளாண்மையை சார்ந்த மக்களாவர்.[1]. இச்சொல் வேளாண் மக்களில் சில வகையினரை குறிக்க பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பொருளில் ஆளப்பட்டுள்ளது. இதை வள்ளல் தன்மையைக் குறிக்கும் சொல்லாகவும் வேளாண்மை சார்ந்த மாந்தரில் குறிப்பிட்ட வகை மக்களை[2] குறிக்கும் சொல்லாகவும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

காராளும் கதியினமும் பயிரினமும் கைவகுத்துப்

போராளு முடிவேந்தர் போர்க்கோல மென்னாளுஞ் சீராளுஞ் செழும்பொன்னித் திருநாடர் புகழ்விளக்கும்

ஏராளும் காராளர் இவர்செய்யும் போராலே - ஏரெழுபது

“கதிர்முனை தீண்டா காராளன்”

கருது முனை கூட தீண்டாது தாம் விவசாயம் செய்யாமல் பல ஆட்களை வைத்து வேலை செய்தவர்கள் என்று பொருள். அதாவது பெரிய நிலைப்ரபுத்துவம் படைத்தவர்கள் அல்லது ராஜா என்று அர்த்தம்.[3]

மணிமேகலையில் காராளர் தொகு

காராளர் என்னும் சொல் முதலில் வரும் தமிழ் இலக்கியம் மணிமேகலை ஆகும். அதில் காராளர் இருந்த நகரமாக சீர்காழி என்னும் சண்பை நகர் இருந்தது.

ஈங்கிந் நகரத் தியான்வருங் காரணம்

பாரா வாரம் பல்வளம் பழுநிய

காராளர் சண்பை - மணிமேகலை 3:27-29

காராளர் சண்பையிற் கௌசிகன் மகளே மாருத வேகனோ டிந்நகர் - மணிமேகலை 7:102-109

மேற்கோள்கள் தொகு

  1. ஏரெழுபது - https://ta.wikisource.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81
  2. ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை மணிமேகலை உரை, பக்கம் - 605
  3. கணக்கண் கூட்டத்தார் பட்டயம் - வாணராய கவுண்டர் வம்சாவளி
"https://ta.wikipedia.org/w/index.php?title=காராளர்&oldid=3298716" இலிருந்து மீள்விக்கப்பட்டது