காரின்சு
காரின்சு என்பது இரும்புக் கால செல்திக்கு மக்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு வகையான காற்று இசைக்கருவி ஆகும். இது கி.மு.300 ஆம் ஆண்டு முதல் கி.பி.200 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. இது ஒருவகையான வெண்கல ஊதுகொம்பு ஆகும். இதன் வாய் ஒரு யபலியின் தலைபோன்றோ அல்லது வேறு ஒரு மிருகத்தின் தலை போன்றோ இருக்கும். இது பொதுவாக போரிலும் மற்ற விசேடங்களிலும் பயன்படுத்தப்பட்டது.