காரிமங்கலம் அருணேசுவரர் கோயில்

காரிமங்கலம் அருணேசுவரர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது காரிமங்கலத்தில் ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ளது.[1] கோயிலுக்குச் செல்ல குன்றுக்கு படிக்கட்டுகளும், சிமெண்டு சாலையும் உள்ளன.

அருணேசுவரர் கோயில்
பெயர்
பெயர்:அருணேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:காரிமங்கலம்
மாவட்டம்:தர்மபுரி மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அருணேசுவரர்
தாயார்:உண்ணாமுலை
தல விருட்சம்:அரச மரம், வேப்பமரம்
சிறப்பு திருவிழாக்கள்:
  • சிவராத்திரி
  • மார்கழி திருவாதிரை
  • நவராத்திரி
  • ஆடி வெள்ளிக்கிழமை
  • ஆடி அம்மாவாசை
  • கார்த்திகை சோமாவாரம்
  • பங்குனி முதல் சோமாவாரம்
  • கடைசி சோமாவாரம்
  • சித்திரை வருடப் பிறப்பு
  • ஐப்பசி அன்னாபிசேகம்
வரலாறு
தொன்மை:கி.பி.11 நூற்றாண்டு

கோயிலின் வரலாறு தொகு

இக்கோயிலின் இறைவன் ஆரணீசுவரமுடையார் என கல்வெட்டுகளில் அழைக்கப்பட்டுகிறார். இக்கோயிலின் பழமையான கல்வெட்டு என்றால் அது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தெளிவற்ற கன்னடக் கல்வெட்டாகும். இந்தக் கோயிலின் கோபுரம் 1898 இல் இராமசெட்டி என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.

கோயிலமைப்பு தொகு

இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், முன்மண்டபம், திருமண மண்டபம், வேள்வி மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அம்மன் கோயில் கோயிலின் வடமேற்கே அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தெற்கு நோக்கி இராச கோபுரம் ஐந்து நிலைகளுடன் உள்ளது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. "KARIMANGALAM-SIVAN/காரிமங்கலம்-சிவன்/அருணேசுவரர்". நவபழனிக்கோ அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். பக். 169.