காரியாசான்

காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். இவரும் கணிமேதாவியாரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூலில் பெருமளவில் அறக்கருத்துகளையும் சிறியளவில் சமண அறக்கருத்துகளையும் கூறியுள்ளார்.

இவரை மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. காரியாசனும் கணிமேதாவியாரும் (ஏலாதி மற்றும் திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்களின் ஆசிரியர்) ஒரு சாலை மாணவர்கள் ஆவர்.

வெளி இணைப்புகள்

தொகு

சிறுபஞ்சமூலத்தில் தேசத்தொண்டு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரியாசான்&oldid=3219443" இலிருந்து மீள்விக்கப்பட்டது