காரிரத்தினக் கவிராயர்

காரிரத்தினக் கவிராயர் என்பவர் உரையாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர். இவர் ஒரு வைணவப் புலவராவார். இவரது காலம் 17-ம் நூற்றாண்டு ஆகும்.

பிறப்பு

தொகு

இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள தென்திருப்பேரையில் வேளாண் மரபில் பிறந்தவர். காரிரத்தினம் என்பது நம்மாழ்வாரின் சிறப்புப் பெயர். வைணவராகிய இக்கவிராயர் நம்மாழ்வாரின் பெயரைப் பெற்றார். இவர் ஆழ்வார் திருநகரியில் இருந்தவரும், மாறன் அலங்காரம் முதலான நூல்களை இயற்றிவருமான திருக்குருகைப் பெருமாள் கவியராயரிடம் கல்வி பயின்றார்.

கல்வி

தொகு

ஆழ்வார் திருநகரில் இருந்த 'மாறன் அலங்காரம்' முதலான நுல்களை இயற்றிய திருக்குருகைப் பெருமள் கவிராயரிடம் கல்வி பயின்றார்.

எழுதிய நூல்கள்

தொகு

மாறன் அலங்காரம் என்ற நூலுக்கு உரையும், திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக 'நுண் பொருள் மாலை' என்ற ஒரு நூலும் இயற்றியுள்ளார். 'தொல்காப்பிய நுண் பொருள் மாலை' என்ற உரை விளக்கம் எழுதியதாகக் கூறுவர்.

நுண்பொருள் மாலை

தொகு

திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு காரிரத்தினக் கவிராயர் இயற்றிய விளக்கமான நூல் 'நுண்பொருள் மாலை'. இவ்விளக்கவுரை செந்தமிழில் (6-10) வெளிவந்தது. பரிமேலழகர் உரையில் விளக்கம் காணவேண்டிய பகுதிக்கும், பலமுறை நுணுகிக் கற்றுத் தெளியவேண்டிய பகுதிக்கும் அரிய இலக்கண குறிப்புக்கும் விளக்கம் எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரிரத்தினக்_கவிராயர்&oldid=3401339" இலிருந்து மீள்விக்கப்பட்டது