காரி (மாறன் காரி)
சங்ககாலக் காரி
தொகுகோவலூர் அரசன் காரி
தொகுபெண்ணை ஆற்றின் கரையிலிருந்த கோவல் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன் மலையமான் திருமுடிக் காரி. இவன் நெடுந்தேர்க் காரி என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். [1]
பாமுள்ளூர் அரசன் காரி
தொகுசங்க கால மன்னன் காரி கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் முள்ளூர் (பாமுள்ளூர்?) நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன்.
இடைக்காலச் சோழர் காலத்துக் காரி
தொகுமாறன் காரி என அழைக்கப்பட்ட இவன் பராந்தகன் ஆட்சிக் காலத்தில் முதல் அமைச்சனாக இருந்தவன். திருநெல்வேலி வட்டம் உக்கிரக் கோட்டை கரவந்த புரத்தில் பிறந்த இவன் காரி என்ற பெயரை உடையவனாவான். இவனின் தந்தையின் பெயர் மாறன். மருத்துவன். மதுரகவி என்ற சிறப்புப் பெயரை உடையவனாவான் இவன் தந்தை. மதுரைக்கு வடகிழக்கே யா.ஒத்தக்கடை என்ற கிராமத்தில் திருமாலுக்கு கற்றுளி அமைத்து கி.பி. 770 ஆம் ஆண்டளவில் நரசிங்கப் பெருமாளை அக்கோவிலுள் எழுந்தருள வைத்தான். அந்தணர்களுக்கு அக்கோயில் அருகிலேயே அக்கிரகாரம் அமைத்தும் கொடுத்தான். இவனது இப்பணியைப் பாராட்டி பராந்தகன் மூவேந்த மங்கலப் பேரரையன் என்ற பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தான். நரசிங்கப் பெருமாள் கோவில் கல்வெட்டில் இவனைப் பற்றிய செய்திக் குறிப்பில் கலியுகம் 3871 எனக் குறிக்கப்பட்டும் உள்ளது. மேலும் இவனைப் பற்றிய குறிப்புகள் வேள்விக்குடிச் செப்பேட்டிலும் சிறப்பித்துக் குறிக்கப்பட்டுள்ளன.