காரைக்கால் அம்மையார் உயர்நிலைப் பள்ளி
காரைக்கால் அம்மையார் உயர்நிலைப் பள்ளி 1985ஆம் ஆண்டு காரைக்காலில் பொன்.ஸ்டாலின் மணி, கே.எஸ்.விஜயன், சி.வி.சி.தேசிகன் ஆகியோரை நிறுவனர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் இந்து சமய அறக்கட்டளையின் ஆட்சிக்குட்பட்ட ஒரு உயர்நிலைப்பள்ளி ஆகும்.
தமிழகத்தில் புகழ்பெற்ற ஆதீனங்களில் ஒன்றான தருமபுர ஆதீனத்தின் 25 வது குருமஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் இக்கல்வி நிறுவனத்திற்கு காரைக்கால் அம்மையாரின் பெயரைச் சூட்டினார். இருபாலரும் பயிலும் வகையில் 32 மாணவ, மாணவியருடன் தொடங்கப்பட்ட இப்பள்ளி தற்போது 1600 மாணவ, மாணவவியருடன் கால் நூற்றாண்டுகளைக் கடந்துள்ளது.