காரைக்கால் கைலாசநாதர் கோயில்

காரைக்கால் கைலாசநாதர் கோயில் என்பது புதுச்சேரி மாவட்டத்தில் காரைக்காலில் அமைந்துள்ள சிவாலயம் ஆகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் கயிலாசநாதர், அம்பாள் சுந்தராம்பாள் என்று அழைக்கப்படுகின்றனர். தீர்த்தம் சந்திரபுஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. இதனை காரைக்கால் அம்மையார் குளம் என்றும் அழைக்கின்றனர்.

காரைக்கால் கைலாசநாதர் கோயில்
பெயர்
பெயர்:காரைக்கால் கைலாசநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:காரைக்கால்
மாவட்டம்:காரைக்கால்
மாநிலம்:புதுச்சேரி
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கைலாசநாதர்
தாயார்:சுந்தராம்பாள்
தீர்த்தம்:சந்திரபுஷ்கரணி

இச்சிவாலயத்தில் பிரம்மோட்ச விழாவில் பஞ்சமூர்த்தி வீதியுலா. பஞ்சமூர்த்தி அபிசேகம், வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா ஆகியவை நடைபெறுகின்றன. இச்சிவாலயத்தின் தேரானது கோயிலிருந்து புறப்பட்டு பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதாகோயில் வீதி ஆகிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைகிறது.[2]

ஆதாரங்கள்

தொகு
  1. "காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாணம்!".
  2. "காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம் - Karaikal kailasanatha temple therottam- Dinakaran". Archived from the original on 2017-04-11. பார்க்கப்பட்ட நாள் 2016-08-30.