கார்டன் இல்லிசு அயில்வார்டு

ஆத்திரேலிய வேதியியலாளர்

கார்டன் இல்லிசு அயில்வார்டு (Gordon Hillis Aylward) ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஒரு வேதியியல் எழுத்தாளர் ஆவார். அனைத்துலக திட்ட வேதியியல் தரவு புத்தகம் எழுதியதற்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.

வாழ்க்கை வரலாறு

தொகு

அயில்வார்டு 1952 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் ஆத்திரேலியாவின் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு வேதியியல் பாட்த்தில் இளம் அறிவியல் (ஆனர்சு) பட்டம் பெற்றார் [1][2].

பின்னர் இவர் அதே பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டமேற்படிப்பு பட்டம் பெற்றார். அவர் மேலும் 13 ஆண்டுகள் அங்கு பகுப்பாய்வு வேதியியலைக் கற்பித்தார் [3]. அந்த காலகட்டத்தில் இவர் தனது இணை ஆசிரியர் டாக்டர் டிரிசுடன் பைன்ட்லேவுடன் சேர்ந்து வேதியியல் கோடைகால பள்ளிகளுக்கான அணுகுமுறை ஒன்றை ஏற்பாடு செய்தார். இப்பாடத்திட்டத்தை ஆதரிக்க இவர்கள் அனைத்துலக வேதியியல் தரவு புத்தகத்தை ஒரு பாடப்புத்தகமாக எழுதினர் [3]. பின்னர் அயில்வார்டு சிட்னியிலுள்ள ஆய்வுப் பல்கலைக்கழகமான மேக்வாரி பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக சேர்ந்தார், 1970 முதல் 2005 இல் ஓய்வு பெறும் வரை அங்கு பணிபுரிந்தார். வளர்ந்து வரும் நாடுகளில் யுனெசுகோவிற்கான அறிவியல் கல்வி ஆலோசகராகவும், பின்னர் உலக வங்கிக்கான ஆலோசகராகவும் இறுதியாக ஒரு மூத்த அறிவியல் கல்வி ஆலோசகராகவும் பணியாற்றினார் [3].

வெளியிடப்பட்ட நூல்கள்

தொகு
  • Aylward, G. H.; T. J. V. Findlay (1965). SI Chemical Data (1st ed.). Milton, Queensland: John Wiley & Sons Australia. Now in its 6th edition.[4].

மேற்கோள்கள்

தொகு
  1. "A lunch half a century later". University of New South Wales. 22 March 2004. Archived from the original on 2008-07-29. பார்க்கப்பட்ட நாள் 2008-05-07.
  2. "The university's first graduates". University of New South Wales. Archived from the original on 27 சூலை 2008. பார்க்கப்பட்ட நாள் 7 மே 2008.
  3. 3.0 3.1 3.2 "Product Information SI Chemical Data". Booktopia. பார்க்கப்பட்ட நாள் 2008-05-07.
  4. Aylward, G. H; Findlay, T. J. V. (Tristan John Victor) (2008), SI chemical data (6th ed.), John Wiley & Sons Australia, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-81638-7