கார்பனைல் நீக்கம்
கார்பனைல் நீக்கம் (Decarbonylation) என்பது ஒரு வேதிச் சேர்மத்திலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்பனைல் குழுக்கள் நீக்கப்படுகின்ற வினையைக் குறிப்பதாகும். பல கரிமக் கார்பனைல் சேர்மங்கள் இத்தகைய கார்பனைல் நீக்க வினையில் ஈடுபடுகின்றன. உலோகக் கூட்டும வினையூக்கிகளின்:[1] முன்னிலையில் ஆல்டிகைடுகளை, ஆல்க்கேன்களாக மாற்றுவதற்கு இவ்வினை பயன்படுகிறது.
RCHO → RH + CO
ஒரு வேதி வினைக்குழு நீங்கிவிடுவதால் பொதுவாக கார்பனைல் நீக்க வினை விரும்பப்படுவதில்லை. இவ்வகை வினைகள் உலோக அசைல் ஐதரைடுகள் வழியாக நிகழ்கின்றன. கீட்டோன்களும், கார்பனைல் குழுவைக் கொண்டுள்ள பிற சேர்மங்களும் ஆல்டிகைடுகளை விடவும் அதிகமான தடையை கார்பனைல் நீக்கத்திற்கு அளிக்கின்றன.
கார்பனைல் நீக்க வினைக்கு எதிர் வினையான வேதிப் பிணைப்பில் கார்பனைலேற்றும் வினை ஒரு பொதுவான வினையாகவும், தொழிற்சாலை முறைகளில் தொடர்பு கொண்ட வினையாகவும் கருதப்படுகிறது. மேலும், இந்நீக்க வினையானது கார்பனைலேற்ற வினைக்கு போட்டி வினையாகவும் கருதப்படுவதுண்டு.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hartwig, J. F. Organotransition Metal Chemistry, from Bonding to Catalysis; University Science Books: New York, 2010.