கார்பிலமைன் விளைவு
கார்பிலமைன் விளைவு (ஆங்கிலம்: Carbylamine reaction) என்பது ஒரு வேதியியல் விளைவு ஆகும். முதல்நிலை அமைன்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த விளைவு பயன்படுகிறது.
ஒரு முதல்நிலை அமைனுடன், குளோரோபார்ம் மற்றும் ஆல்க்ககால் கலந்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்ந்தால் துர்நாற்ற வாடையுடைய ஐசோசயனைடுகள் தோன்றும். இந்த துர்நாற்ற வாடையைக் கொண்டு முதல்நிலை அமைன்கள் இருப்பதை உறுதி செய்யலாம். இதில் உருவாகும் ஐசோசயனைடுகளே கார்பிலமைன்கள் எனப்படும், இந்த விளைவே கார்பிலமைன் விளைவு ஆகும்.
இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை அமைன்களுடன் இந்த விளைவு ஐசோசயனைடுகளை உருவாக்காது.
உதாரணங்கள்
தொகுமெத்தில் அமைனுடன்
தொகுCH3NH2 + CHCl3 + 3KOH → CH3-NC + 3KCl + 3H2O