கார்ல் கீனான் சீபெர்ட்

கார்ல் கீனான் சேபெர்ட் (Carl Keenan Seyfert) (பிப்ரவரி 11, 1911 – ஜூன் 13, 1960) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தனது 1943 ஆய்வுக் கட்டுரைக்காகப் பெயர்பெற்றவர். இதில் இவர் சில சுருள் பால்வெளிகளின் மையங்களில் இருந்து வெளியேறிய உயர்கிளர்வு உமிழ்வரிகளைப் பற்றி ஆய்வு செய்தார். எனவே இப்பால்வெளிகள் இவரது நினைவாக சீபெர்ட் பால்வெளிகள் என பெயரிடப்பட்டன. மேலும் சீபெர்ட் அறுஅங்கள் என பால்வெளிகளின் குழுவொன்றும் இவரது பெயரிடப்பட்டுள்ளன.

கார்ல் கீனான் சேபெர்ட்
பிறப்புபெப்ரவரி 11, 1911(1911-02-11)
கிளீவ்லாந்து, ஓகியோ, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூன் 13, 1960(1960-06-13) (அகவை 49)
நாழ்சுவில்லி, Tடென்னெசி, ஐக்கிய அமெரிக்கா
தானூர்தி ஏதம்
துறைவானியல்
பணியிடங்கள்மெக்டொனால்டு வான்காணகம்
மவுண்ட் வில்சன் வான்காணகம்
கேசு நிறுவனம்
டையர் வான்காணகம்
கல்விஆர்வார்டு பல்கலைக்கழகம் (முனைவர், 1936)
ஆய்வேடுபுறப் பால்வெளி ஆய்வுகள் (1936)
ஆய்வு நெறியாளர்ஆர்லோ சேப்ளே
துணைவர்வார்ப்புரு:திருமணம்
பிள்ளைகள்2

வாழ்க்கைதொகு

இவர் ஓகியோவைச் சேர்ந்த கிளீவ்லாந்தில் பிறந்து வளர்ந்தார். பின்னர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் 1929 இல் இருந்து கல்வி பயின்றார் . இவர் தன் அறிவியல் இளவல், முதுவர் பட்டங்களை 1933 இல் பெற்றார். தன்வானியல் முனைவர் பட்டத்தை 1936 இல் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வு "புறப் பால்வெளிகளின் ஆய்வுகள்" என்பதாகும். இவரது முனைவர் பட்ட வழிகாட்டி ஆர்லோ சேப்பிளே ஆவார். இதில் இவர் பால்வெளிகளின் நிறங்களையும் பருமைகளையும் ஆய்ந்தார்.

இவர் 1935 இல் முரியல் எலிசபெத் முசல்சு என்ற வானியலாளரை மணந்தார். முசல்சு வளிம ஒண்முகில் ஆய்வுக்குப் பெயர்பெற்றவர். இவர்களுக்கு கார்ல் கீனான் சீபெர்ட், இளவல் எனும் மகனும் கைல் கரோல் என ஒரு மகளும் உண்டு[1]

இவர் 1960 இல் நாழ்சுவில்லியில் தானியங்கி ஏதத்தில் இறந்தார்; டையர் வான்காணக அருகில் அமைந்த குடியிருப்புத் தெருவுக்குக் கார்ல் சீபெர்ட் நினைவு ஓட்டத் தெரு என இவரது நினைவாக மறுபெயர் இடப்பட்டது.

வானியல் பங்களிப்புகள்தொகு

இவர் பல் வானியல் ஆய்வுக் கட்டுரைகளை விண்மீன்கள் பற்றியும் பால்வெளிகள் பற்றியும் நோக்கீட்டு முறைகள் பற்றியும் வானியல் கருவிகள் பற்றியும் வெளியிட்டுள்ளார்.

இவர் 1943 இல்பொலிவு மிகுந்த கருவமைந்த பால்வெளிகள் குறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். இப்பால்வெளிகள் அகன்ற உமிழ்வரி கதிர்நிரல்மைந்தவையாகும். இதற்கான எடுத்துகாட்டு மெசிய 77 (புபாபொ 1068) ஆகும். இவ்வகைப் பால்வெளிகள் சீபெர்ட் பால்வெளிகள் என இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.

நூல்தொகைதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Frommert, Hartmut (2007). "Seyfert, Carl Keenan". in Hockey, Thomas. The Biographical Encyclopedia of Astronomers. New York: Springer. பக். 1045–1046. doi:10.1007/978-0-387-30400-7_1261. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. https://books.google.com/books?id=t-BF1CHkc50C&pg=PA1045&lpg=PA1045. 

வெளி இணைப்புகள்தொகு