கார்ல் ஜாஸ்பெர்ஸ்
கார்ல் தியோடர் ஜாஸ்பர்ஸ் (Karl Theodor Jaspers) (இடாய்ச்சு: [ˈjaspɐs]; 23 பிப்ரவரி 1883 – 26 பிப்ரவரி 1969) ஒரு ஜெர்மன்-சுவிஸ் மனநோய் மருத்துவர் மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் இவர் நவீன இறையியல் மற்றும் மனநல மருத்துவம் மற்றும் மெய்யியல் ஆகியவற்றில் பலமான அறிவு கொண்டிருந்தார். மனநல மருத்துவத்தில் பயிற்சி பெற்று மருத்துவம் பார்க்க ஆரம்பித்த பிறகு ஜாஸ்பெர் மெய்யியல் விசாரணையில் தனது ஆர்வத்தைத் திருப்பினார். அவர் ஒரு புதுமையான மெய்யியல் அமைப்பைக் கண்டறிய முயற்சித்தார். பொதுவாக, ஜெர்மனியில் இருத்தலியல்வாதத்தின் முக்கிய குறியீடாக அவர் கருதப்பட்டார். இருப்பினும் அவர் எந்த வித அடையாளக் குறியீட்டையும் ஏற்கவில்லை.
கார்ல் ஜாஸ்பெர்ஸ் | |
---|---|
கார்ல் ஜாஸ்பெர்ஸ் -1946 | |
காலம் | 20ஆம்-நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி | புதிய கான்டியனியல் (தொடக்க காலம்)[1] இருத்தலியல் (பிற்காலம்) இருத்தலியல் நிகழ்வியல்[2] (பிற்காலம்) |
முக்கிய ஆர்வங்கள் | மன நல மருத்துவம், இறையியல், வரலாற்றின் மெய்யியல் |
வாழ்க்கை வரலாறு
தொகுஜாஸ்பெர்ஸ் 1883 ஆம் ஆண்டில் ஓல்டன்பேர்க்கில் ஒரு உள்ளூர் விவசாய சமூகத்திலிருந்து வந்த ஒரு தாய்க்கும், ஒரு நீதிபதி தந்தைக்கும் மகனாகப் பிறந்தார்.அவர் மெய்யியலில் ஆரம்பத்திலேயே ஆர்வம் காட்டினார். ஆனால், ஜாஸ்பெர்ஸின் முடிவை அவரது தந்தையின் அனுபவம் சந்தேகத்திற்கிடமின்றி மாற்றியது. விளைவாக ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க நேர்ந்தது. ஜாஸ்பர்ஸ் குறிப்பாக சட்டத்தை விரும்பவில்லை என்பது தெளிவாகிவிட்டது, 1902 ஆம் ஆண்டில் மருத்துவத்துறைக்குத் திரும்பினார். குற்றவியல் பற்றிய ஒரு ஆய்வறிக்கையுடன் அவர் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தார். 1910 ஆம் ஆண்டில்ன் அவர் கெட்ருட் மேயர் (1879–1974) என்பவரை மணந்தார்.
1908 ஆம் ஆண்டில் ஐடல்பேர்க் மருத்துவக் கல்லூரியின் பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் பெற்றார். ஐடல்பேர்க்கில் உள்ள ஃபிரான்ஸ் நிஸ்லில், எமில்க்ராபலின் மற்றும் கார்ல் போன்ஹோபர், மற்றும் கார்ல் வில்மன்ஸ் ஆகியோரின் வாரிசாக பணிபுரிந்தார். அந்த நேரத்தில் மருத்துவ சமூகம் மன நோயைப் பற்றிய ஆய்வுக்கு அணுகிய முறை குறித்து அதிருப்தியடைந்தார். மன நல மருத்துவம் தொடர்பான அணுகுமுறையை மேம்படுத்துவதற்கான பணியைத் தானே எடுத்துக் கொண்டார். 1913 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக பணிக்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டு ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் புலத்தில் சேர்ந்தார். 1914 ஆம் ஆண்டில உளவியல் ஆசிரியராகப் பணி கிடைக்கப் பெற்றார். அந்த பதவி பின்னர் அவரை நிரந்தரமாக மெய்யியல் துறைக்கு இழுத்துக் கொண்டது. ஜாஸ்பர்ஸ் மருத்துவம் பார்ப்பதற்கு ஒருபோதும் திரும்பவேயில்லை. இந்த நேரத்தில் ஜாஸ்பர் வெபர் குடும்பத்தின் நெருங்கிய நண்பராக மாறினார் (மேக்ஸ் வெபரும் ஐடல்பேர்க்கில் ஒரு பேராசிரியராக இருந்தார்).[3]
1921 ஆம் ஆண்டில், 38 வயதில், ஜாஸ்ஸ்பெர்ஸ் உளவியலில் இருந்து மெய்யியலை நோக்கித் திரும்பினார். அவர் மனநல மருத்துவத்தில் உருவாக்கிய கருப்பொருள்களை விரிவுபடுத்தினார். அவர் ஜெர்மனிலும், ஐரோப்பாவிலும் ஒரு மெய்யியலாளர் ஆனார். 1933 ஆம் ஆண்டில் நாஜிக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதற்குப் பிறகு, ஜேஸ்பர்ஸ் தனது யூத மனைவியின் காரணமாக, 1937 ஆம் ஆண்டில் கற்பிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார். 1938 ஆம் ஆண்டில் அவர் ஆய்வறிக்கைகள் வெளியிடவும் தடை செய்யப்பட்டார். அவரது நீண்ட கால நண்பர்களில் பலர் அவருடன் துணை நின்றனர். அதன் காரணமாக, அவர் முற்றிலும் தனிமைப்படுத்தப்படாமல் தனது ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சியை தொடர முடிந்தது. 30 மார்ச் 1945 வரை ஐடல்பேர்க்கானது அமெரிக்கத் துருப்புக்களால் விடுவிக்கப்படும் வரை, அவரும், அவருடைய மனைவியும் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்தனர். 1948 ஆம் ஆண்டில் ஜாஸ்பெர் சுவிட்சர்லாந்தில் உள்ள பேசல் பல்கலைக்கழகத்திற்கு மாறினார். அவர் மெய்யியல் சமூகத்தில் முக்கியமானவராக இருந்தார். மேலும், 1969 ல் அவரது மனைவியின் 90 வது பிறந்த நாள் அன்று இறக்கும் வரை பாசலில் வாழ்ந்து சுவிட்சர்லாந்தின் ஒரு இயற்கையான குடிமகன் ஆனார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 https://plato.stanford.edu/entries/jaspers/
- ↑ Ernesto Spinelli, Practising Existential Psychotherapy: The Relational World, SAGE, 2007, p. 52: "Karl Jaspers can be considered to be among the earliest direct attempts to apply existential phenomenology to psychotherapy".
- ↑ Radkau, Joachim (1995) Max Weber: A Biography. Polity Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780745683423. p. 29.