கார்ல் மார்க்சு நினைவுச்சின்னம்

கார்ல் மார்க்சு நினைவுச்சின்னம் (Karl Marx monument) என்பது உருசிய நாட்டின் மாசுகோ நகரில் 1962 ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் சிற்பி இலெவ் கெர்வெல் என்பவரால் உருவாக்கபட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். மாசுகோவிலுள்ள நாடக அரங்க சதுக்கத்தின் போல்சோய் நாடக அரங்கு அருகில் இந்நினைவுச் சின்னம் அமைந்துள்ளது.

கார்ல் மார்க்சு நினைவுச்சின்னம், மாசுகோ
Monument to Karl Marx in Moscow
ஆள்கூறுகள்55°27′10″N 37°22′16″E / 55.4529°N 37.3710°E / 55.4529; 37.3710
இடம்போல்சோய் திரையரங்கு அருகில், மாசுகோ
வடிவமைப்பாளர்இலெவ் கெர்பெல்
கட்டுமானப் பொருள்கருங்கல்
திறக்கப்பட்ட நாள்1962
அர்ப்பணிப்புகார்ல் மார்க்சு

மார்க்சு நினைவுச்சின்னம் 160 டன் எடையுள்ள சாம்பல் நிற கருங்கல்லின் ஒற்றைத் தொகுதியால் செய்யப்பட்டதாகும். குடசேவ்சுகி சுரங்க குவாரியில் உள்ள டினெப்ரோபெட்ரோவ்சுக்கிற்கு அருகே இங்கருங்கல் தோண்டி எடுக்கப்பட்டது. தற்போது இவ்விடம் உக்ரைனில் அமைந்துள்ளது. மார்க்சு மேடையில் நின்று கொண்டு, உழைக்கும் மக்களை நோக்கி அனல் பறக்கும் பேச்சால் உரையாற்றுவது போல் இந்த நினைவுச் சின்னம் சித்தரிக்கப்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியத்திலுள்ள அனைத்து நாடுகளின் பாட்டாளிகளே, ஒன்றுபடுங்கள்! என்ற முழக்கத்துடன் நினைவுச் சின்னம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் நினைவுச்சின்னத்தின் இருபுறமும் இரண்டு கருங்கல் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றில் மார்க்சின் இறுதிச் சடங்கில் கூறப்பட்ட பிரெடரிக் ஏங்கெல்சின் வார்த்தைகள் செதுக்கப்பட்டுள்ளது: "இவரது பெயரும் செயலும் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும்" என்பன அவ்வார்த்தைகளாகும். மற்றொன்றில் - லெனினின் சொற்றொடரான "மார்க்சின் போதனை சர்வ வல்லமை வாய்ந்தது, ஏனென்றால் அது ஓர் உண்மை." [1] என்ற வார்த்தைகள் செதுக்கப்பட்டுள்ளது.

வரலாறு

தொகு

1957 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மார்க்சின் நினைவுச்சின்னத்திற்கான சிறந்த திட்டத்திற்காக அனைத்து சங்கத்தினருக்கான ஒரு போட்டி நடைபெற்றது; இப்போட்டியின் வெற்றியாளர் சிற்பி லெவ் கெர்பெலின் தலைமையிலான படைப்பாற்றல் குழுவாகும். நினைவுச்சின்னத்தின் பிரமாண்டமான திறப்புவிழா அக்டோபர் 29, 1961 அன்று நடைபெற்றது. உயர் கட்சி மற்றும் சோவியத் தலைமை, காங்கிரசு பிரதிநிதிகள், பிற நாடுகளின் பொதுவுடமைக் கட்சிகளின் விருந்தினர்கள் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது.

பரவலர் பண்பாட்டில்

தொகு

1988 ஆம் ஆண்டு அதிரடித் திரைப்படமான ரெட் ஈட் திரைப்படத்தில் இந்நினைவுச் சின்னம் இடம்பெற்றுள்ளது.[2]

மேர்கோள்கள்

தொகு
  1. Гак А. К истории создания памятника К. Марксу // Искусство. 1977, № 10. С.58-61
  2. "RED HEAT MOVIE STILL". Archived from the original on 2021-11-28. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.