கார நீராற்பகுத்தல்

கார நீராற்பகுத்தல் (Alkaline hydrolysis) என்பது பொதுவாக கரிம வேதியியலில் அணுக்கருகவர் பதிலீட்டு வினை வகையைக் குறிக்கும். இவ்வகை வினைகளில் ஐதராக்சைடு அயனி தாக்குகின்ற மின்னணு மிகுபொருளாகச் செயல்படுகிறது.

உதாரணம் தொகு

எசுத்தர்கள் மற்றும் அமைடுகளின் கார நீராற்பகுத்தல் வினையில், மின்னணு மிகுபொருளான ஐதராக்சைடு அயனி அணுக்கருகவர் அசைல் பதிலீட்டு வினையின் போது கார்பனைல் கார்பனைத் தாக்குகிறது. ஓரிடத்தான் அடையாளங் காணும் சோதனைகள், இவ்வினையின் வினைவழி முறைக்கு வலு சேர்க்கின்றன. உதாரணமாக, எத்தில் புரொப்பியோனேட்டுடன் ஓர் ஆக்சிசன்–18 எனப்பெயரிடப்பட்ட ஈதாக்சி குழுவைச் சேர்த்து சோடியம் ஐதராக்சைடுடன் சூடுபடுத்தினால் உருவாகும் சோடியம் புரொப்பியோனேட்டில் ஆக்சிசன்–18 முற்றிலுமாக இருப்பதில்லை. ஆனால் வினையில் உருவாகும் எத்தனாலில் அது காணப்படுகிறது.[1]

 

பயன்கள் தொகு

சாக்கடைநீர் தூய்மையாக்கிகள் இம்முறையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. குழாய்களில் காணப்படும் மாசுப் பொருட்களை இம்முறையில் அவை கரைக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. McMurry, John (1996). Organic Chemistry (4th ). Pacific Grove, CA: Brooks/Cole Publishing Company. பக். 820–821. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0534238327. https://archive.org/details/organicchemistry00mcmu. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார_நீராற்பகுத்தல்&oldid=3849268" இலிருந்து மீள்விக்கப்பட்டது