காற்றுநிலையியல்
இயற்பியல் சொல்
காற்றுநிலையியல் (Aerostatics) என்பது நிலையாக இருக்கும் காற்றைப்பற்றிப் படிப்பதாகும். இதேபோல், இயக்கத்தில் இருக்கும் காற்றைப்பற்றிப் படிக்கும் அறிவியல் காற்றியக்கவியல் எனப்படும். காற்றுநிலையியலானது, பாய்ம நிலையியலின் ஒரு துணைப்பிரிவாகும். காற்றுநிலையியல் அடர்த்தி ஒதுக்கீட்டை விளக்குகிறது, குறிப்பாக காற்றில். காற்றழுத்தச் சமன்பாடு இதன் முக்கியப் பயன்பாடுகளுள் ஒன்றாகும்.
காற்று மிதவைகள் காற்றைவிட இலகுவான கலன்களாகும், வான்கப்பல் மற்றும் ஊதுபை போன்றவை, அவை காற்றுநிலையியல் விதிகளின்படி மிதக்கின்றன.