காற்றைக் கையாளும் இயந்திரம்
காற்று கையாளும் இயந்திரம், அல்லது காற்றைக் கையாளும் அலகு பெரும்பாலும்(AHU - Air Handling Unit) என சுருக்கமாக ஆங்கிலத்தில் அறியப்படும், இந்த இயந்திரமானது காற்றினை வெப்பமூட்டும், ஈரப்படுத்தும், கட்டுப்படுத்தும் (HVAC) சாதனமாகும்.[1]
இந்த இயந்திரமானது பொதுவாக ஒரு காற்றூதி, வெப்பமூட்டும் அல்லது ஈரப்படுத்தும் உறுப்புகள், வடிகட்டி சட்டங்கள் அல்லது அறைகள், ஒலிகுறைப்பிகள், அதிர்வுதாங்கி போன்றவற்றை உள்ளடக்கி பெரிய உலோகப் பெட்டியில் இருக்கும்.[2] காற்றைக் கையாளும் இயந்திரங்கள் பதப்படுத்தப்பட்ட காற்றினை ஒரு வெளியேற்றும்குழல் (Discharge Duct) வழியாக கட்டிடத்திற்கு விநியோகிக்கிறது, பின்பு அந்தக்காற்று மற்றொரு குழல் (Admit Duct) வழியாகவே காற்றுக் கையாளும் இயந்திரத்திற்கே திரும்புகிறது. சிலநேரங்களில் காகைஅலகிலிருந்து(AHU) காற்று நேரடியாக வெளியேற்றப்படும் மற்றும் உள்வாங்கப்படும்.
சான்றுகள்
தொகு- ↑ 2008 ASHRAE handbook : heating, ventilating, and air-conditioning systems and equipment (Inch-Pound ed.). Atlanta, Ga.: ASHRAE American Society of Heating, Refrigerating and Air-Conditioning Engineers. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781933742335.
- ↑ Carrier Design Manual part 2: Air Distribution (1974 tenth ed.). Carrier Corporation. 1960.