காலக்கணிப்பு விண்மீன்
காலக்கணிப்பு விண்மீன் (star clock) என்பது இரவு நேரத்தில் விண்மீன்களைப் பயன்படுத்தி நேரத்தைக் கணிக்கும் ஒரு முறையாகும். இம்முறையில், நிலையான கடிகாரத்தின் அடிப்படையில் வானத்தில் எழுமீனின் நிலைப்பாட்டை எளிய கூட்டல் கழித்தல் கணக்கீடுகளின் மூலம் அளவிட்டு நேரம் முடிவு செய்யப்படுகிறது. இம்முறைக்கு எந்த கருவிகளும் தேவையில்லை. மற்றவர்கள் காட்சிக் கோளம் மற்றும் கோள் மண்டலம் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
சராசரி விண் நேர வீதத்தைக் காண்பிக்குமாறு ஒரு கடிகார சீரியக்கியை சரிசெய்து கொள்ள முடியும். அவ்வாறு சரி செய்து கொண்ட பின்னர் உற்றுநோக்குபவர்கள் தங்களுடைய உள்ளூர் சராசரி விண் நேர வீதத்தை அமைத்துக் கொள்கின்றனர். பின்னர் ஒரு விண்மீன் அதனுடைய விண்நேரத்தில் வலஎழுச்சிக் கோணம் வாயிலாக உலக தெற்கு வடக்கு சுற்றுக்கோட்டை வடக்கு அல்லது தெற்கில் கடந்து போவதைக் கொண்டு நேரத்தைக் கணக்கிடுகின்றனர்.
இவற்றையும் காண்க
தொகுவெளிப்புற இணைப்புகள்
தொகு- Telling Time by Sun and Stars by John P. Pratt
- Inquiry.net