காலடியணையக் கட்டமைப்பு

உயிரியலில் காலடியணையக் (pedate) கட்டமைப்பு அல்லது இணைதாள் மடல் கட்டமைப்பு என்பது மாந்தனின் காலடியை நினைவூட்டும் அல்லது காலடியொத்த பண்புள்ள பின்னற் கட்டமைப்பாகும்.

தாவரங்கள்

தொகு
 
இணைதாள் மடல் இலை.

தாவரவியலாக, இச்சொல் கூட்டிலைகளையும் கூட்டு நரம்பமைவையும் ஒத்த பிற தாவரக் கட்டமைவுகளையும் குறிக்கிறது. இந்த அமைப்பில் இக்கட்டமைப்பு ஒரு நடுமையப் புள்ளியில் தோன்றிப் பிரிந்து பரவும், பிறகு வேண்டுமானால் ஒவ்வொரு உட்பிரிவும் இரண்டாக நுகம்போல கிளைக்கும்.[1] மிக அகல்விரிவாக, இது இறுதியில் சிற்றிலைகள் கிளைக்கும் கூட்டிலையைக் குறிக்கலாம். இலையின் அச்சுகள் இருபுறமும் பிரிந்து செல்வதோடு அவை முன்னும் பின்னும் வெளிப்புறமோ உட்புறமோ வளைந்து செல்லும். அச்சின் வெளிப்புற வளைவில் சிற்றிலைகளைப் பெற்றமையும்.[2] இதற்கு இணைதாள் மடற் கட்டமைப்புக்குப் பனை மட்டை நல்ல எடுத்துகாட்டாகும்

விலங்குகள்

தொகு

விலங்குகளில் "pedate" எனும் சொல் "காலுள்ள" எனும் பொருளில் வழங்குகிறது. இது முட்தோலிகளின் பின்னற் குழல்காலடிகளையும் முதுகென்பிகளின் இணைகால்களையும் குறிக்கும்.

 
இணைகாலிகள்

மேற்கோள்கள்

தொகு
  1. Harris, James G.; Harris, Melinda Woolf (1994). Plant Identification Terminology (2nd ed.). Spring Lake, Utah: Spring Lake Publishing. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9640221-6-8.
  2. Walters, Stuart Max (2000). The European garden flora. Cambridge University Press. p. 674.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலடியணையக்_கட்டமைப்பு&oldid=3737523" இலிருந்து மீள்விக்கப்பட்டது