காலப் பெயர்

தமிழ் இலக்கணத்தில் காலப் பெயர் என்பது ஒரு வகைப் பெயர்ச்சொல் ஆகும். இது, பொதுக் காலப் பெயர், சிறப்புக் காலப் பெயர் என இரண்டு வகைப்படும்.

பொதுக் காலப் பெயர்கள்

தொகு

ஒரு குறிப்பிட்ட காலத்தைக் குறிக்காமல் காலத்தைப் பொதுவாகக் குறிக்கும் சொற்கள் பொதுக் காலப் பெயர்கள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டு:

  • விநாடி
  • கிழமை
  • ஆண்டு
  • காலம்

சிறப்புக் காலப் பெயர்கள்

தொகு

ஒரு குறிப்பிட்ட காலத்தைக் குறிக்கப் பயன்படும் சொற்கள், சிறப்புக் கால பெயர்கள் எனப்படும்.

  • மாசி
  • பங்குனி
  • இளவேனில்

போன்ற பெயர்கள் சிறப்புக் காலப் பெயர்களாகும்.

பதிலி காலப் பெயர்கள்

தொகு

காலப் பெயர்களுக்கான பதில் சொற்களாக, இப்போது, எப்போது, அப்போது போன்ற சொற்கள் பயன்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலப்_பெயர்&oldid=3110350" இலிருந்து மீள்விக்கப்பட்டது