காலவரைபடம்

காலப்பதிவி (chronograph) என்பது நிறுத்து கடிகாரமாகவும் தொடர் காட்சிக் கடிகாரமாகவும் பயன்படுத்தவல்ல சிறப்புவகைக் கடிகாரமாகும். அடிப்படை காலப்பதிவியில் தற்சார்பான நொடி முள்ளும் தனி மணித்துளி துணை அளவு வட்டிலும் உள்ள கடிகாரமாகும்; கடிகாரப் பொத்தானை அடுத்தடுத்து அழுத்தி இதைத் தொடங்கவும் நிறுத்தவும் சுழிக்குக் கொணவும் இயலும். மேலும் சிக்கலான காலப்பதிவிகள் பல சிக்கல்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றில் பல அளவு வட்டில்கள் நொடி, மணித்துளி, மணி, நொடிக்கூறுகள் ஆகியவற்றுக்காக அமையும். மேலும், பல நிகழ்கால காலப்பதிவிகள் சுற்றளவிகளாகவும், தொலைவு அளவிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. உலூயிசு மோயினெட் குழுமம் 1816 இல் வான்பொருளைப் பின்பர்ருவதற்கால வானியல் காலப்பதிவியை உருவாக்கியது[1][2]

(வார்ப்புரு:Ca.) சுவிட்சர்லாந்து கால்லெட்டு கடிகாரக் குழுமம் உருவாக்கியது.
கால்லெட் குழும] வானியல் பல காலப்பதிவி (வார்ப்புரு:Ca.) ஒரு சிக்கலான எந்திரக் காலப்பதிவி; நாள், திங்கள், நிலாவின் கலை ஆகியவற்ரைத் தன்னியக்கமாகப் பதியக் கூடிய 12 மணி நேர செயல் திறன் காலப்பதுவி.
சுவிசு வீனசு 175 சார்ந்த தியாஞ்சின் கடல்-கழுகு ST1901 காலப்பதிவி இயக்கம்
யப்பானிய இயக்கமுள்ள குவார்ட்சு வெள்ளோட்டக் கடிகாரம்
மயோட்டா குழும 6S21 வகைமை காலப்பதிவி இயக்கம்
குவார்ட்சு காலப்பதிவியும் இயக்கமும்
சிட்டிசன் அட்டேசா ATV53-3023 வகை ஒப்புமை-இலக்கவியல் காலப்பதிவி, அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, யப்பான் பகுதிகளில் இயங்கும் கதிர்விச்சுவகைக் காலப்பதிவி

காலவரைபடம் வீண்மீன்கள் உச்சியைக் கடக்கம் தருணத்தைப் பதிவு செய்யப் பயன்படுத்தலாம். தானே இயங்கும் ஒரு பொறி அமைவு கால வரைபடம் அல்லது கால வரையம் (Chronograph) எனப்படும். 40 செ.மீ நீளமும், ஒரு சில செ.மீ அகலமுள்ள ஓர் உருளை, காகிதம் சுற்றப்பட்டு, மின்னியல் கருவி ஒன்றோடு இணைக்கப்பட்டிருக்கும். காகிதத்தில் ஒரு நொடிக்கொருதுமுறை அல்லது இரண்டு நொடிகளுக்கொரு முறை குறியிடும் வகையில் பேனா ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.

வீண்மீன்களைக் காண, உச்சிவட்டத்தில் சூழலுமாறு அமைக்கப்பட்டிருக்கும். ஒரு தொலைநோக்கியின், பொருளருகு வில்லையின் (Objective glass) குவிமையத்தளத்தில் ஒற்றைப்படையான 5 அல்லது 7 செங்குத்துக் கம்பிகள் சம இடைவெளிகளின் பதிக்கப்பட்டிருக்கும். தொலைநோக்கி மூலம் குறிப்பி்டட ஒரு வீண்மீனின் பாதையைக் கணித்துக் கொண்டிருக்கும் ஆய்வாளர் அவ்வீண்மீன் உச்சிக்கருகில் வரும்போது நேரத்தைக் குறித்துக் கொள்வார். பின்னர் அது ஒவ்வொரு கம்பியைக் கடக்கும்போதும், மி்ன் கருவியைத் தட்ட, காகிதத்தில் ஒவ்வொரு முறையும் குறி ஒன்று குறிக்கப்படும். வீண்மீன் இறுதிக் கம்பியைகக் கடந்தவுடன் நேரத்தைக் குறித்துக் கொள்வார். காகிதத்தில் பதிவு செய்யப்பட்ட குறிகளைக் கொண்டு, தமக்கு வேண்டிய கால அளவுகளைக் கணக்கிடுவார்.கம்பிகளைக் கடந்தநேரமாகும். கால வரை படத்தின் மூலம் நேரங்களை மிகவும் நுட்பமாகக் கணக்கிடலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Worldtempus, Louis Moinet The chronograph's inventor". Archived from the original on 2017-02-21. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20.
  2. Elizabeth Doerr, Forbes, History Rebooted: The Chronograph's Inventor is...Louis Moinet!.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலவரைபடம்&oldid=3869397" இலிருந்து மீள்விக்கப்பட்டது