காலிசிஃபுளேரே

காலிசிஃபுளேரே என்பது தாவரவியலாளர்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படாத தாவரங்களின் தொகுப்பாகும். அகஸ்டின் பைரமஸ் டி கண்டோல் இருவித்திலைத் தாவர குடும்பங்களில் ஒரு துணைக்குடும்பமாக இதனை வரையறுத்துள்ளார்.[1] இது நவீன வகைப்பாட்டில் ரோசிட்ஸ் தொகுதியுடன் பெரும்பாலும் ஒத்திருந்தது. காலிசிஃபுளேரே தொகுதியின்  வரையறை என்பது:

  • மலர்களில் உள்ள புல்லி இதழ்கள் குறைந்தது மலரின் அடிப்பாகத்திலாவது இணைந்து (இணைந்த புல்லி), ''டாரஸ்'' (தட்டு) போன்று காணப்படுகிறது. இதிலிருந்து அல்லி இதழ்களும் மகரந்தங்களும் சூலகத்துடன் இணைந்து தோன்றினாலும் புல்லி இதழ்களோடு ஒட்டியும் அல்லது ஒட்டாமலும் காணப்படும்.[1]

மேலும் பார்க்க

தொகு
  • டி கண்டோல் வகைப்பாடு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Augustin Pyramus de Candolle (1825), Prodromus systematis naturalis regni vegetabilis, vol. 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிசிஃபுளேரே&oldid=3841869" இலிருந்து மீள்விக்கப்பட்டது