காலின் மெக்கன்சியின் கிழக்கத்திய சுவடிகள் விபரப்பட்டியல் (ஆங்கில நூல்)
காலின் மெக்கன்சியின் கிழக்கத்திய சுவடிகளினதும் பிற ஆவணங்களினதும் விபரப்பட்டியல் (Mackenzie Collection: A Descriptive Catalogue of the Oriental Manuscripts and Other Articles ) என்பது 1828 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு விபரப்பட்டியல் ஆகும். இது பல தென்னிந்திய மற்றும் பிற மொழிகளில் இருந்த சுவடிகள் பற்றிய விபரங்களைத் தருகிறது. இவற்றுள் தமிழ்ச் சுவடிகளே பெரும்பான்மை. தமிழ்ச் சுவடிகளே பெரும்பான்மையாகக் கிடைத்துள்ளன என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மொழிகள் பற்றிய சுருக்கமான விபரிப்பையும் இந்த நூல் தருகின்றது. இந்த ஆசிரியர்களின் விபரிப்பில் அன்றைய கால இனவாதக் கருத்துத் தொனிகள் காணப்படுகின்றன.
இந்த நூல் இரண்டு தொகுதிகளைக் கொண்டது. இதனை இணைய ஆவணகத்தில் படிக்கலாம், தரவிறக்கலாம்.