கால்சியம் மோனோபாசுபைடு
கால்சியம் மோனோபாசுபைடு (Calcium monophosphide) என்பது CaP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சில நேரங்களில் கால்சியம் பாசுபைட்டு என்றும் அழைக்கப்படுகிறது. கால்சியம் பாசுபைட்டும் Ca3P2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கால்சியம் பாசுபேட்டாகவும் கருதப்படுகிறது. கால்சியம் மோனோபாசுபைடு கருப்பு நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கால்சியம் பாசுபைடு
| |
இனங்காட்டிகள் | |
39373-03-0 | |
EC number | 254-431-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CaP (Ca2P2) | |
தோற்றம் | கருப்பு நிற திண்மம் |
சிதைவடையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H260, H300, H311, H318, H330, H400 | |
P223, P231+232, P260, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+352, P304+340, P305+351+338, P310 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கட்டமைப்பு
தொகுகால்சியம் மோனோபாசுபைடின் கட்டமைப்பு சோடியம் பெராக்சைடு சேர்மத்தின் கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பு கொண்டதாக உள்ளது.[1]
பண்புகள்
தொகுஇத்திண்மம் Ca2P2 என்ற வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உப்பாகும். வேதிப் பிணைப்பு அயனிப் பிணைப்பு என்பதால் இருபாசுபைடு மையங்கள் எதிர்மின் சுமையுடன் எளிதாக புரோட்டானேற்றம் அடைகின்றன. நீராற்பகுப்பு வினையில் இச்சேர்மம் இரு பாசுபீனை வெளியிடுகிறது (P2H4)::[2]
- Ca2P2 + 4 H2O → 2 Ca(OH)2 + P2H4
CaP மற்றும் கால்சியம் கார்பைடின் (CaC2) நீராற்பகுப்புகள் ஒரே மாதிரியானவையாகும். ஆனால் இருபாசுபீன் காற்றில் தானாகவே பற்றிக்கொள்ளும். எனவே, CaP காற்றில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
கால்சியம் மோனோபாசுபைடு 600 பாகை செல்சியசு வெப்பநிலையில் Ca3P2 சேர்மமாக சிதைவடைகிறது. 3 CaP → Ca3P2 + 1/4 P4
மேற்கோள்கள்
தொகு- ↑ Iandelli, A. and Franceschi, E., "On the crystal structure of the compounds CaP, SrP, CaAs, SrAs and EuAs", Journal of the Less Common Metals, 1973, volume 30, pp. 211-216. எஆசு:10.1016/0022-5088(73)90107-0
- ↑ Marianne Baudler, Klaus Glinka (1993). "Monocyclic and polycyclic phosphines". Chem. Rev. 93 (4): 1623–1667. doi:10.1021/cr00020a010.