கால்சிலைட்டு

டெக்டோசிலிக்கேட்டு வகை கனிமம்

கால்சிலைட்டு (Kalsilite) என்பது KAlSiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கிழக்கு ஆப்பிரிக்க நாடானா உகாண்டா நாட்டில் உள்ள சாமெங்கோ நிலக்குழிவுகள் போன்ற சில பொட்டாசியம் நிறைந்த எரிமலைக்குழம்புகளில் கண்ணாடிப் பளபளப்புடன் காணப்படுகிறது. வெண்மை நிறம் முதல் சாம்பல் நிறம் வரையிலான நிறத்தைக் கொண்டிருக்கும். டெக்டோசிலிகேட் கனிமங்களின் ஒரு குழுவான குறை சிலிக்கா களிமம் குழுவைச் சேர்ந்த கனிமமாகக் கருதப்படுகிறது. கால்சிலைட்டு கனிமத்தின் கடினத்தன்மை மதிப்பு 5.5 ஆகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் கால்சிலைட்டு கனிமத்தை Kls [2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

கால்சிலைட்டு
Kalsilite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுKAlSiO4
இனங்காணல்
நிறம்நிறமற்றது, வெண்மை,சாம்பல்
படிக அமைப்புஅறுகோணம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை6
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு, மெழுகுத்தன்மை
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளி புகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி2.59–2.62
மேற்கோள்கள்[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kalsilite". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2021-12-17.
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சிலைட்டு&oldid=4104083" இலிருந்து மீள்விக்கப்பட்டது