கால்சைட்டு

கால்சைட்டு ஒரு கால்சியம் கார்பனேட்டின் படிக வடிவம்; இது ஒரு தாதுப்பொருள். இது சாய்சதுர அமைப்பில் படிகமாகிறது; பொதுவாக நிறமற்று இருப்பினும், சிவப்பு, இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்திலும் இவை காணப்படுகின்றன. இதன் ஒரு வடிவமான ஐசுலாந்துச் சுண்ணாம்புக்கல்லின் முக்கியப்பண்பு இரட்டை விலகல் ஆகும். இது மிக நிலைப்புத் தன்மை வாய்ந்தது.

கால்சைட்

கால்சைட்டு ஒரு முக்கியமான பாறை-உருவாக்கும் தாதுப்பொருள். இது சுண்ணாம்புக்கல், பளிங்கு, சுண்ணக்கட்டி ஆகிய பொருள்களின் முக்கிய உட்பொருளாகும். பைஞ்சுதை, சுண்ணம், உரத் தயாரிப்பில் கால்சைட்டு பயன்படுகிறது.

கலைச்சொற்கள்

தொகு
  • சாய்சதுரம் - rhombohedral
  • இளஞ்சிவப்பு - pink
  • சுண்ணாம்புக்கல் - spar ; limestone
  • இரட்டை விலகல் - double refraction
  • பளிங்கு - marble
  • சுண்ணக்கட்டி - chalk
  • பைஞ்சுதை - cement
  • சுண்ணம் - lime

படிமங்கள்

தொகு

குறிப்புதவி

தொகு
  • daviddarling [1]
  • கலைச்சொற்கள் உதவி - தமிழ் விக்சனரி [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சைட்டு&oldid=2741762" இலிருந்து மீள்விக்கப்பட்டது