கால்தட்டல்
கால்தட்டல் (stepping) என்பது ஒரு அமெரிக்க ஆடல் வடிவம் ஆகும். இதை அடியடித்தல், கால் அடித்தல், மிதித்தல் என்றும் கூறலாம். இந்த நடனம் கால் தட்டல், கைதட்டல், உடல் அசைவுகள், பேச்சு என பல்வேறு வழிகளில் உடலைக் கொண்டு இராகமாக இசையெழுப்பிய வண்ணம் ஆடப்படுகிறது.
இந்த ஆட்டம் ஆபிரிக்க அமெரிக்கர்களிடம் 1900 களில் தொடங்கப்பட்டு, இன்றும் கல்லூரிகளில் பெரிதும் ஆடப்படுகிறது.
2010 இல் அட்லாண்டாவில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் முதன் முதலாக வெள்ளைப் பெண்கள் கொண்ட அணி முதல் பரிசை வென்றது.