கால்நடைத் தீவனம்

கால்நடைத் தீவனம் (cattle feed) என்பது கால்நடைகளான ஆடு, மாடு, பசு, எறுமை போன்ற மனிதரைச் சார்ந்திருக்கும் விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவாகும்.

புற்களை மேயும் பசு

உண்ணும் முறை

தொகு
  1. பயிர்களை மேய விடுதல்
  2. பயிர்களை அறுத்து விலங்குகள் இருக்கும் பட்டியில் வைத்தல்
  3. குதிர் போன்ற பெரும் சேமிப்புகளிலிருந்து அளித்தல்: பொதுவாக குதிரில் கால்நடைகளைக்கட்டி விட்டு அதனை உண்ண வைப்பர்.
  4. புண்ணாக்கு நீரில் கலந்தோ கலக்காதோ இடுவது பழக்கம். பால் கறக்கும் மாடுகளுக்கு பருத்தி கொட்டையும் புண்ணாக்கும் கலந்து கொடுப்பது வழக்கமாகும்.

புண்ணாக்கு வகைகள்

தொகு
  1. தேங்காய்ப் புண்ணாக்கு
  2. கடலைப் புண்ணாக்கு
  3. எள்ளுப் புண்ணாக்கு

வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும்

தொகு

பொதுவாக பண்ணையாளர்களும் உழவரும் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் சேர்ந்தே செய்வர். பயிர்களில் மனிதருக்கு தேவையில்லதவற்றை கால்நடைகள் உண்ணுவதோடு, இது பொருளாதார ரீதியிலும் பயனளிக்கின்றது. கலந்து இரண்டையும் செய்வதே பொதுவாக உலகெங்கும் காண இயலும்[1].

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்நடைத்_தீவனம்&oldid=3502514" இலிருந்து மீள்விக்கப்பட்டது