கால்வாரிப்பேய்
கால்வாரிப்பேய் என்பது தமிழக கிராமப்புறப் பேய்க் கதைகளில் கூறப்படும் ஒரு பேயாகும். கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவர்கள், உயிரோடு புதைக்கப்பட்டவர்கள் போன்றவர்களின் சடலங்கள் கால்வாரிப்பேய்களாக மாறிவிடும் என்று கதைக்கப்படுகிறது. தன் சடலத்தின் மேல் நடந்து செல்பவர்களின் காலை வாரிவிட்டு இது கொன்றுவிடும் என்று கூறுகிறார்கள்.